இன்றைய ராசி பலன் (04.08.2024)

Report

மேஷம்

முன்னோர்களை வழிபட்டு நன்மை அடையும் நாள்.வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் தோன்றும். கவனமாக செயல்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.எதையும் யோசித்து செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.

மிதுனம்

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.செலவிற்கேற்ற வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலை நடந்தேறும்.

கடகம்

உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சிம்மம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.வியாபாரத்தில் சில பிரச்சினைகள் சந்திக்கக்கூடும்.வார்த்தைகளில் கவனம் அவசியம்.

கன்னி

பொருளாதார நிலை உயரும்.நேர்மையாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.தொழிலில் எதிர்கொள்ளும் முயற்சி வெற்றி அடையும்.உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் இந்த படத்தை வாங்கி வையுங்கள்

அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் இந்த படத்தை வாங்கி வையுங்கள்


துலாம்

பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்

மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும்.செயல்களில் தடுமாற்றம் தோன்றும். ஆலய வழிபாடு நன்மைதரும்.பழைய பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.

தனுசு

அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.விழிப்புடன் செயல்படுவதால் நன்மை உண்டாகும்.உங்கள் முயற்சி நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும்.குலதெய்வ வழிபாட்டால் மனம் நிம்மதி அடையும்.

மகரம்

உங்கள் நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும்.இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப நிதானமாக செயல்படுவது நன்மையாகும்.

கும்பம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேறு ம்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வர்.

மீனம்

உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் போகலாம்.நட்புகளால் சில சங்கடங்களுக்கு ஆளாகக்கூடும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US