நாளைய ராசி பலன்(08-12-2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக சில சிக்கல் வரலாம். வருமான தடை விலகி சில முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். நன்மையான நாள்.

ரிஷபம்:

தொலை தூர பயணம் செல்பவர்களுக்கு இன்று இனிய நாளாக அமையும். வேலை தொடர்பான சங்கடம் இருந்தால் விலகி பாராட்டுக்கள் கிடைக்கும். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

மிதுனம்:

வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் இருந்த பிரச்சனைகள் விலகும் நாள். பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை.

கடகம்:

பிரிந்த சென்ற சொந்தம் உங்களை மீண்டும் வந்து பேசுவார்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் சந்தித்து வந்த கடன் பிரச்சனை நல்ல முடிவை பெரும் நாள்.

சிம்மம்:

அக்கம் பக்கத்தில் இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களால் இன்று உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பெரும் நாள்.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது செய்யக்கூடாத தவறுகள்

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது செய்யக்கூடாத தவறுகள்

கன்னி:

இன்று உங்களுக்கு மனதில் தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும். தாயின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். சிலருக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும். குலதெய்வம் அருள் கிடைக்கும்.

துலாம்:

இன்று வேலை பளு அதிகரிக்கும் நாள். உங்களை புரிந்து கொள்ளாமல் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும்.

விருச்சிகம்:

மருத்துவ செலவுகள் குறையும் நாள். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். தந்தை உடல் நிலையில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

தனுசு:

பிள்ளைகள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். சிலருக்கு குடும்பத்தில் உள்ள மன குழப்பங்கள் விலகும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை கிடைக்கும் நாள்.

" சேர சாம்ராஜ்யத்தின் ஸ்ரீரங்கம் " எங்கு உள்ளது தெரியுமா?

" சேர சாம்ராஜ்யத்தின் ஸ்ரீரங்கம் " எங்கு உள்ளது தெரியுமா?

மகரம்:

தேவை இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்கு வாதம் செய்யாதீர்கள். பணத்தை கவனமாக செலவு செய்வது அவசியம். பெற்றோர்கள் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்:

உங்கள் வங்கி கணக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும். திருமண வரன் உங்களுக்கு கைகூடி வரும். நினைத்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும் நாள்.

மீனம்:

மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பற்றி பெருமை அடையும் நாள். சொந்தங்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். நீண்ட நாள் இட பிரச்சனை நல்ல முடிவு பெரும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US