இன்றைய ராசி பலன்(10-12-2025)
மேஷம்:
இன்று உங்களின் நெருக்கடிகள் விலகும் நாள். நீண்ட நாளாக முடிவு பெறாத காரியம் ஒன்று நல்ல முடிவு அடையும். இன்று உங்கள் புத்திசாலித்தனத்தால் வருகின்ற பிரச்சனையை எளிதாக சமாளிப்பீர்கள்.
ரிஷபம்:
பொருளாதார ரீதியாக நீங்கள் சில பிரச்சனைகள் வரலாம். உறவினர்கள் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். இன்று அலுவலகத்தில் நிதானமாக செயல்படுவது நன்மை செய்யும்.
மிதுனம்:
உங்கள் வருமானத்தை உயர்த்தும் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் இடையே உங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும் நாள்.
கடகம்:
இன்று தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த சிக்கல்கள் யாவும் விலகும். மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும் நாள். நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றியும் மகிழ்ச்சியும் நாள்.
சிம்மம்:
இன்று சிக்கனமாக செலவு செய்யவும். உங்களுக்கு நெருங்கியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே வீட்டுக் கொடுத்து செல்வது நன்மை செய்யும்.
கன்னி:
இன்று மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீண்ட நாளாக நீங்கள் எதிர்பார்த்த தகவல் உங்களை வந்து சேரும். உங்கள் செயல்களில் இருந்த குழப்பம் விலகும். வீண் அலைச்சல் சந்திக்கும் நாள்.
துலாம்:
இன்று நினைத்ததை சாதிக்கும் நாள். பழைய பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவை பெரும். இன்று வேலையில் சாதுரியகமாக செயல்பட்டு பாராட்டுக்கள் பெறுவீர்கள். இருப்பினும் சிலரை அனுசரித்து செல்லவும்.
விருச்சிகம்:
உங்களுக்கான எதிரிகளை கண்டு கொள்வீர்கள். உங்களுக்கு சங்கடம் கொடுத்தவர்கள் உங்களை விட்டு செல்வார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
தனுசு:
இன்று நீங்கள் குடும்பத்தில் சந்தித்த நெருக்கடிகள் விலகும் நாள். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மகரம்:
இன்று எதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேசும் வார்த்தைகளில் நிதானமும் மென்மையும் தேவை. குடும்பத்தினர் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.
கும்பம்:
இன்று சமுதாயத்தில் உயர் அதிகாரிகளின் அறிமுகமும் பாராட்டுகளும் கிடைக்கும். சொந்தங்கள் மத்தியில் சந்தித்த குழப்பங்கள் விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
மீனம்:
நினைத்ததை சாதித்து மகிழ்ச்சி அடையும் நாள். நீண்ட நாள் சந்தித்த குடும்ப பிரச்சனை நல்ல முடிவு பெறும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகள் விலகும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |