இராமாயணம்: இராவணன் செய்த இந்த மோசமான செயலை பற்றி தெரியுமா?
இதிகாசங்களில் ராமாயணம் மிக அற்புதமான காவியமாகும். அப்படியாக ராமாயணத்தில் வரக்கூடிய கதாபாத்திரங்களில் ராவணன் எப்பொழுதுமே பத்து தலை கொண்ட ஒரு அசுரன் என்ற ஒரு பிம்பத்தோடும், சீதையை கடத்தி சென்று போரில் ஸ்ரீ ராமபிரானால் வீழ்த்தப்பட்டவன் என்ற கதையைத்தான் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், ராவணனை பற்றி பலருக்கும் ஒரு சில முக்கியமான விஷயங்கள் தெரிவதில்லை.
அதாவது நம்முடைய வரலாறுகளை எடுத்துக் கொண்டால் அந்த புராணங்களில் வரக்கூடிய நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளை நாம் பார்க்கலாம். ஆனால் இதில் ஒருவருடைய நோக்கம் தான் அவன் நாயகனா? அல்லது வில்லனா? என்று தீர்மானிக்கிறது.
ராவணனுடைய வலிமை மற்றும் அவருடைய புத்திசாலித்தனம், லட்சியம் அவனுடைய இறை தொண்டு, பக்தி இவை எல்லாம் இருந்தும் அவன் ஏன் தவறு செய்ய துணிந்தான் என்ற ஒரு கேள்வியில் தான் ராமாயணம் நமக்கு பல விஷயங்களை உணர்த்துகிறது.
அப்படியாக, ராவணன் மோசமான செயலை மட்டும் தான் செய்தான் என்பதை தாண்டி அவருடைய சில முக்கியமான அம்சங்களை நாம் தெரிந்து கொண்டோம் என்றால் ராவணனையும் நாம் நேசிக்க தொடங்கி விடுவோம் என்பது போல் இருக்கிறது. அந்த வகையில், ராவணனுடைய ஒரு ஐந்து முக்கியமான சிறந்த குணம் பற்றி பார்ப்போம்.

1. ராவணன் ஒரு சிறந்த மேதை:
ராவணன் ஒரு பலசாலி என்று நாம் அறிந்திருப்போம். ஆனால் அவன் பலம் உடலில் மட்டும் இல்லை அவனுடைய அறிவிலும் இருந்திருக்கிறது. ராவணன் மந்திரங்கள் ஜோதிடம், இசை, மருத்துவம் என்று எல்லா கலைகளையும் கற்று சிறந்தவராக இருக்கிறார்.
இன்று சிவாபக்தர்களின் பிடித்தமான சிவதாண்டவ ஸ்தோத்திரத்தை ராவணன் தான் பாடியவர். இவை எல்லாம் நமக்கு ராவணன் அறிவில் எவ்வளவு சிறந்தவன் என்று உணர்ச் செய்கிறது. எவ்வளவுஅறிவு இருந்தும் நாம் எப்பொழுதும் ராவணனிடம் ஒரு திமிர் இருப்பதை காணலாம், ஆக ராவணன் எவ்வளவு அறிவாக இருந்தாலும் அவன் கட்டாயம் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகவும் இருக்கிறார்.
2. ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தர்:
ராவணன் ஒரு அரக்கனாக இருந்தாலும் அவன் ஒரு மிகுந்த சிவ பக்தராக எப்பொழுதும் இருந்திருக்கிறார். அதோடு ராவணன் அவனுடைய சிவ பக்தியை வெளிக்காட்டும் வகையில் கைலாய மலையை தூக்குவதற்காக முயற்சி செய்திருக்கிறார். ராவணனின் பக்தியால் சிவபெருமானே மனம் குளிர்ந்து அவருக்கு ஆசிர்வாதம் வழங்கியிருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் சிவபெருமான் அவனை யாராலும் நெருங்க முடியாத அளவிற்கு ஒரு வலிமையான மனிதனாக மாற்றி இருக்கிறார். இந்த இடத்தில் ராவணன் வழியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இறைவழிபாடு மட்டுமே ஒரு மனிதனை சிறந்தவனாக மாற்றி விடுவதில்லை. எப்பொழுதும் சுய சிந்தனையை பரிசீலனை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

3. ராவணன் ஒரு வலிமையான தலைவர்:
ராவணன் இலங்கையை மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அதாவது அவர் ஆட்சி செய்த நேரத்தில் செல்வ வளம் எங்கும் நிறைந்து காணப்பட்டது. அவருடைய மக்களுக்காக அவர் நிறைய தியாகங்களும் பணிகளும் செய்தார்.
இருந்தாலும் அவருடைய அந்த அகங்காரமானது அவருடைய பணியில் இருந்து திசை தடுமாற செய்து விட்டது. சீதையை அடைய வேண்டும் என்ற அந்த ஒரு எண்ணம் அவரை ஒரு நல்ல தலைவர் என்ற ஒரு நிலையில் இருந்து கீழே தள்ளி விட்டது. ஆக, இங்கு நாம் ஒரு ஒரு மனிதனுக்கு சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் எவ்வளவு அவசியம் என்று நம்மால் உணர முடிகிறது.
4. ராவணனுக்கு குடும்பம் எப்பொழுதும் முக்கியமாம்:
ராவணன் பக்தி, வீரம், ஒரு சிறந்த தலைவர் என்பதை தாண்டி அவர் குடும்பத்தையும் மிகச் சிறப்பாக நேசித்திருக்கிறார். அவருடைய உடன் பிறந்தவர்கள் அவருடைய பெற்றோர்கள் அவருடைய குழந்தை என்று எல்லோரையும் அளவு கடந்து நேசித்த ஒரு மனிதனாக இருந்திருக்கிறார்.
ஆக இந்த இடத்தில் ராவணன் கால சூழ்நிலையால் அவன் எடுத்த முடிவு அவனை நமக்கு ஒரு வில்லனாக காண்பிக்கிறது. ஆனால், ஒரு வில்லனுக்குள்ளும் ஒரு சிறந்த குணங்கள் இருக்கிறது என்பதற்கு இங்கு ராவணன் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

5. ராவணன் ஒரு மிகச்சிறந்த போர் வித்தகர்:
போர் என்று வந்துவிட்டால் இராவணன் ஒரு மிகச்சிறந்தவர். அவரின் படையை யாரும் அசைக்க முடியாத அளவிற்கு வழிநடத்தக்கூடிய தன்மையும் ஆற்றலும் பெற்றிருந்தார். அவருடைய அறிவு போர்காலங்களில் அவனை யாரும் வீழ்த்தவே முடியாத நிலையில் நிறுத்தி இருக்கிறது.
ஏன், ஸ்ரீ ராமபிரானுக்கு கூட இராவணனை வீழ்த்துவதற்கு பிரபஞ்சத்தினுடைய உதவி தேவைப்பட்டிருக்கிறது. ஆக இங்கு இராவணன் எவ்வளவு வலிமையானவனாக எல்லா இடங்களில் இருந்தாலும் தவறாக நடக்க முயற்சிக்கும் பொழுது கட்டாயமாக நம்மை வீழ்த்த இந்த பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கும் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்.
ஆக, இங்கு ராவணன் நம்மை ராமாயணத்தை பற்றி மறுபரிசீலனை செய்வதற்கு நம்மை தூண்டுகிறார். பல விஷயங்களை நம்மை பக்குவமாக கையாள்வதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார். இனிமேல்ராமாயணம் படிக்கும் பொழுது ராவணனை ஒரு வில்லனாக பார்க்காமல் எந்த இடத்தில் ராவணன் கண்மூடித்தனமாக தவறுகளில் ஈடுபடுகிறான் என்பதை உணர்ந்து அந்த தவறுகளில் இருந்து நாம் பாடங்களை கற்றுக்கொண்டு வாழ்க்கையின் உண்மையை உணர்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |