நாளைய ராசி பலன்(17-12-2025)
மேஷம்:
உங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுக்கள் வெற்றிகரமாக அமையும். பிள்ளைகள் எதிர்காலத்தில் முழுமையான கவனம் செலுத்துவீர்கள். சொந்தங்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.
ரிஷபம்:
மருத்துவ ரீதியாக சில செலவுகள் சந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் நீங்கள் சிறந்து விளங்குவார்கள். வங்கி தொடர்பான விஷயங்களில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் விலகும்.
மிதுனம்:
மன ரீதியாக சந்தித்த குழப்பங்கள் யாவும் விலகும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும் நாள். தாய் உடல் நிலையில் முன்னேற்றம் காணும் நாள்.
கடகம்:
அக்கம் பக்கத்தில் சில சண்டைகள் சந்திக்கலாம். உங்கள் குடும்பத்தில் சில விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:
தொழில் ரீதியாக நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். கணவன் மனைவி இடையே சில குழப்பங்கள் வரலாம். உடன் பிறந்தவர்கள் இடையே சொத்து பிரச்சனை வரலாம்.
கன்னி:
வேலையில் இன்று கவனச்சிதறல் உண்டாகும். உங்களின் வீண் பிடிவாதம் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களிடம் கவனமாக பேசுங்கள். மறைமுக எதிரிகள் விலகி செல்வார்கள்.
துலாம்:
உடல் நிலையில் கவனம் தேவை. சிலருக்கு தலை தொடர்பான பிரச்சனைகள் வரலாம். உங்கள் தொழில் வாழ்க்கையை முனேற்றம் செய்ய கடின உழைப்பு போடுவீர்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
வாழ்க்கை துணையிடம் சற்று நிதானமாக பேசுங்கள். குடும்பத்தில் வீண் சண்டைகள் மற்றும் வாக்கு வாதம் வரலாம். வம்பு வழக்குகளில் சந்தித்த பிரச்சனை நல்ல முடிவு பெரும் நாள்.
தனுசு:
காலை முதல் உடல் சோர்வாக காணப்படும். குடும்பத்தில் உங்களுக்கு பேச்சுக்கு மதிப்பு உயரும். மதியம் மேல் உங்களுக்கு பிடித்த நேரத்தை செலவு செய்வீர்கள். நன்மையான நாள்.
மகரம்:
உங்களுக்கு தொழில் ரீதியாக பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி நிம்மதி உண்டாகும். பெற்றோர்கள் வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் நாள்.
கும்பம்:
அரசாங்க வழியே உங்களுக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். மாலை மேல் நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். சிலருக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள்.
மீனம்:
பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். வண்டி வாகனம் மாற்றும் யோசனை உண்டாகும். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடும் நாள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |