இன்றைய ராசி பலன் (08 - 01- 2026)
மேஷம்:
சிலருக்கு வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வெளியூர் செல்லும் பொழுது வாகனங்களில் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
இன்று குடும்பத்தினருடன் பேசும் பொழுது வார்த்தைகளில் மிகுந்த கவனம் வேண்டும். வருமான உயர்வை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
மிதுனம்:
மனதில் எதிர்காலம் பற்றிய பயம் வரும். வழக்கு விஷயங்களில் மிகுந்த கவனத்தோடு செயல்படுங்கள். பெற்றோர்கள் உடல் நிலையில் கவனம் வேண்டும். சகோதரி உறவால் சிக்கல் வரலாம்.
கடகம்:
பிள்ளைகளுடன் நீங்கள் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத நபரின் அறிமுகத்தால் உங்களுக்கு சில முக்கியமான செய்தி கிடைக்கும்.
சிம்மம்:
தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த கஷ்டங்கள் விலகும். சேமிப்பு கணக்கில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அத்தை வழி உறவால் சில முக்கியமான உதவிகள் பெறுவீர்கள்.
கன்னி:
உங்கள் திருமண விஷயங்களை பற்றி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீடுகளுக்கு திடீர் விருந்தினர் வருகையால் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நன்மையான நாள்.
துலாம்:
இன்று சுற்றி உள்ள நபரின் உண்மையான முகத்தை புரிந்து கொள்வீர்கள். வம்பு வழக்குகளில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் விலகும். தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சனைக்கு முடிவு காலம் வரும்.
விருச்சிகம்:
முன் கோபத்தை தவிர்த்து விடுங்கள். பிறரை பற்றி விமர்சனம் வைக்காதீர்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆன்மீக தேடல் சிலருக்கு வரலாம். பிடித்த உணவுகளை சாப்பிடுவீர்கள்.
தனுசு:
உங்கள் எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். சொந்தங்கள் மத்தியில் சந்தித்த மனக்கசப்புகள் விலகி மன அமைதி உண்டாகும்.
மகரம்:
எதிரிகளால் சந்தித்த தொல்லைகள் விலகும். மனதில் உள்ள கவலையை நண்பரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய விஷயங்களை தேடி கற்று கொள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும்.
கும்பம்:
சொந்தங்களுடன் உங்களுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வெளிநாடு செல்ல திட்டம்போட்டு இருப்பவர்களுக்கு நினைத்த வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்:
மனதில் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செய்தியால் சில மனக்கசப்புகள் வரலாம். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நன்மையான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |