இன்றைய ராசி பலன் (10-01-2026)
மேஷம்:
ஒரு சிலருக்கு வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக சந்தித்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் நாள்.
ரிஷபம்:
உங்கள் குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். தொழில் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகும்.
மிதுனம்:
வேலையில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு எதிரிகளால் பெரிய பிரச்சனைகள் வரலாம். அமைதியாக பேசினால் மட்டுமே வருவதை சமாளிக்கலாம். கவனம் வேண்டும்.
கடகம்:
தந்தை உடல் நிலையில் முழுமையான கவனம் செலுத்துங்கள். தேவை இல்லாத விஷயங்களை பற்றி யோசிக்காதீர்கள். குழந்தைகள் உடல் நிலையில் முழுமையான அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்:
எதிர்காலம் பற்றிய கவலையும் பயமும் உண்டாகும். யாரிடமும் கடன் வாங்காதீர்கள். பண சேமிப்பு அவசியம். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
கன்னி:
மாணவர்கள் இன்று முக்கியமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். தாயிடம் மனம் விட்டு பேசி மகிழக்கூடிய நாள். பாராட்டுக்கள் கிடைக்கும் நாள்.
துலாம்:
சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். மருத்துவ ரீதியாக சந்தித்த பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும் நாள்.
விருச்சிகம்:
உங்களை பற்றி சிலர் தேவை இல்லாத விமர்சனங்கள் வைக்கலாம். எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அமைதியான நாளாகும். அக்கம் பக்கத்தில் பேசும் பொழுது மிகுந்த கவனம் தேவை.
தனுசு:
குடும்பத்தில் உங்களுக்கு இன்று முழு ஆதரவு கிடைக்கும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் நாள்.
மகரம்:
புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும் நாள். சொந்தங்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நினைத்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்.
கும்பம்:
ஒரு சிலருக்கு இன்று மனதில் திருமண வாழ்க்கையை பற்றிய குழப்பம் வரும். சரியான முடிவு எடுக்க முடியாமல் குழப்பம் உண்டாகலாம். பொருளாதார ரீதியாக நீங்கள் நல்ல மாற்றம் பெறுவீர்கள்.
மீனம்:
உங்கள் வீடுகளில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுக்கள் சாதகமாக அமையும். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். மகள் வழி உறவால் சந்தித்த பிரச்சனைகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |