நாளைய ராசி பலன் (16-01-2026)
மேஷம்:
ஒரு சிலருக்கு வீடுகளில் இருந்த வந்த கவலைகள் யாவும் விலகும். வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு வங்கி தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் விலகும். சிலருக்கு திடீர் வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும்.
ரிஷபம்:
குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். திருமணம் தொடர்பான பிரச்சனைகள் விலகும். குடும்பத்துடன் குலதெய்வம் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை.
மிதுனம்:
திருமண வாழ்க்கையில் நீங்கள் சில குழப்பத்தை சந்திப்பீர்கள். வீடுகளில் கருத்து வேறுபாடுகள் வரலாம். முடிந்த வரை மன அமைதியோடு இருப்பது நல்லது. தொழில் ரீதியாக நல்ல மாற்றம் கிடைக்கும்.
கடகம்:
மன குழப்பங்கள் விலகும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயமும் ஆறுதலும் கிடைக்கும். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருங்கள்.
சிம்மம்:
நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சிலர் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் செல்லும் நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். நன்மையான நாள்.
கன்னி:
இன்று முக்கியமான நபரை சந்திப்பீர்கள். வாழ்க்கையில் முக்கியமான முடிவு எடுக்கும் நாள். வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.
துலாம்:
இன்று நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் வரும். வெளிநாடு செல்ல வேண்டும் திட்டமிட்டு இருந்தால் நிச்சயம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரி வழி உறவால் ஆதரவு கிடைக்கும் நாள்.
தனுசு:
பிள்ளைகள் திருமண பேச்சு சாதகமாக அமையும். தேவை இல்லாத வீண் வாக்குவாதங்கள் குடும்பத்தில் செய்யாதீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் நாள்.
மகரம்:
தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த குழப்பங்கள் விலகும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நன்மையான நாள்.
கும்பம்:
அரசு வழியே உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு நல்ல ஆறுதலாக இருப்பார்கள்.
மீனம்:
பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் முக்கியமான முடிவு எடுக்கும் நாள். தொழில் ரீதியாக நண்பர்கள் வட்டாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் திறமை வெளிப்படும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |