நாளைய ராசி பலன் (25-01-2026)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும். வருமானம் உயர்த்துவதை பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களுடன் மிக சிறந்த நேரத்தை செலவு செய்வீர்கள். நன்மையான நாள்.

ரிஷபம்:

உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு உடல் சோர்வு உண்டாகும். பிறரிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மிதுனம்:

உங்கள் வீடுகளில் எதிர்பாராத பிரச்சனை சந்திப்பீர்கள். விடுமுறை நாட்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

கடகம்:

குடும்பத்துடன் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். ஒரு சிலருக்கு உறவினர்களின் துணையால் முக்கிய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் வரும். நிதானமாக இருக்க வேண்டும்.

வீடுகளில் துளசி செடி அடிக்கடி காய்ந்து போகிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்

வீடுகளில் துளசி செடி அடிக்கடி காய்ந்து போகிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்

சிம்மம்:

பொழுது போக்கு விஷயங்களில் பங்கு கொள்ளும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாத செலவுகளை தவிர்த்து விடுங்கள். குடும்பத்துடன் மன கசப்புகள் வரலாம். மதியம் மேல் சரி ஆகும்.

கன்னி:

வீடுகளில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். எதையும் தீர ஆலோசனை செய்து பிறகு நல்ல முடிவிற்கு வருவது நல்லது. வருமானம் உயர்த்துவதை பற்றி சிந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

இன்று வாழ்க்கை தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். குடும்பத்தினர் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். எதிர்பாராத நட்புகள் அறிமுகம் நல்ல மாற்றம் கொடுக்கும் நாள்.

விருச்சிகம்:

அரசு வழியில் சில முக்கியமான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் உங்கள் சொந்த வாழ்க்கை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் ஆறுதல் கிடைக்கும்.

உங்களை அறியாமல் உங்கள் கர்ம வினையை உயர்த்தும் 7 விஷயங்கள்- கவனமாக இருங்கள்

உங்களை அறியாமல் உங்கள் கர்ம வினையை உயர்த்தும் 7 விஷயங்கள்- கவனமாக இருங்கள்

தனுசு:

வீட்டில் உள்ள குடும்ப பிரச்சனை நல்ல முடிவை பெரும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். பிள்ளைகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்:

வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு மன கசப்பை கொடுக்கும். குலா தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு இனிமை கொடுக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்:

தேவை இல்லாமல் வீண் வாக்குறுதிகள் யாருக்கும் கொடுக்காதீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.

மீனம்:

உங்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல் நீங்கள் சில செயல்களை செய்வீர்கள். தொலை தூர பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பிரிந்து சென்ற உறவுகள் உங்களிடம் மீண்டும் வந்து பேசுவார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US