இன்றைய ராசிபலன் (23-06-2026)
மேஷம்:
இன்று உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகும். திறமைக்கேற்ற பாராட்டுகளை பெறுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.
ரிஷபம்:
இன்று வருமானம் முன்னேற்றுவதை பற்றி சிந்திப்பீர்கள். தேவை இல்லாத குழப்பத்திற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். புதிய நட்பின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்:
இன்று வருமானம் வந்தாலும் செலவு கூடவே சேர்ந்து வரும். வேலையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். நினைத்த எண்ணம் நிறைவேறும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வார்கள்.
கடகம்:
இன்று வேலையில் எதிர்பாராத சில பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். பெரியவர்களின் ஆலோசனையால் மனதில் தெளிவு பிறக்கும்.
சிம்மம்:
இன்று உங்கள் பேச்சுகளில் அனுபவமும் அறிவும் வெளிப்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிறருடைய பலம் அறிந்து செயல்படுவீர்கள்.
கன்னி:
உடன் பிறந்தவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். சமுதாய பணிகளில் சிலர் பங்கு கொள்ளலாம். திடீர் வருமானம் மகிழ்ச்சியை கொடுக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்:
இன்று வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய அனுபவம் மேம்படும். அரசு சார்ந்த வேலையில் ஆதாயம் உண்டாகும். பொறுமையாக செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்:
நினைத்த காரியம் முடிவதற்கு சில காலதாமதம் ஆகலாம். உங்களுடைய பணிவான பேச்சுகளால் உங்கள் மீது நம்பிக்கை உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது அவசியமாகும்.
தனுசு:
இன்று உங்கள் அணுகுமுறையில் சில மாற்றங்கள் காணப்படும். குடும்பத்தினர் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் சிந்தனை அதிகரிக்கும்.
மகரம்:
வியாபாரத்தில் சிலர் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். அரசு தொடர்பான காரியங்கள் கைக்கூடி வரும்.
கும்பம்:
இன்று உங்கள் செயல்பாடுகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
மீனம்:
கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவதால் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |