இன்றைய ராசி பலன் (04-03-2026)

Report

 மேஷம்:

இன்று உங்களுக்கு மனதில் மிக பெரிய குழப்பம் உண்டாகும். திடீர் வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகலாம். வேலை பளு உண்டாகலாம். எதிரிகளின் மறைமுக தொல்லையால் சில கஷ்டம் வரலாம்.

ரிஷபம்:

எதையும் இன்று யோசித்து செயல்படவேண்டிய நாள். உங்கள் வீட்டிற்கு முக்கியமான நபரின் வருகையால் நன்மை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கும்.

மிதுனம்:

மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பமும் பயமும் உண்டாகலாம். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மை தரும். வீடுகளில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை பெரும்.

கடகம்:

உடல் சோர்வு உண்டாகலாம். தந்தை வழி உறவுகளில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் விலகும். வெளிநாடு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மதியம் மேல் மனக்குழப்பம் விலகும்.

இந்து மதத்தில் 8 வகையான திருமணங்கள் உள்ளதாம் ? என்ன தெரியுமா ?

இந்து மதத்தில் 8 வகையான திருமணங்கள் உள்ளதாம் ? என்ன தெரியுமா ?

சிம்மம்:

தொழில் ரீதியாக சந்தித்த வந்த கஷ்டங்கள் விலகும். அரசியல் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி:

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் பேச்சு திறமையால் நீங்கள் சில முக்கியமான விஷயங்களை சாதித்து கொல்வீர்கள். வேலைக்காக வெளிநாடு செல்ல நேரலாம்.

துலாம்:

சிலருக்கு மனசோர்வு உண்டாகும். காலை முதல் மனம் அமைதியை விரும்பும். வாழ்க்கை துணையிடம் இருந்து வந்த குழப்பம் விலகும். திருமண தொடர்பான பேச்சுக்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

விருச்சிகம்:

மனதில் தேவை இல்லாத குழப்பத்தால் மன அமைதியை குறையலாம். மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

2026: சனி பெயர்ச்சியில் மிகவும் சுமாரான பலன்களை பெறும் ராசிகள்

2026: சனி பெயர்ச்சியில் மிகவும் சுமாரான பலன்களை பெறும் ராசிகள்

தனுசு:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் உங்களுக்கு சில குழப்பத்தையும் மனக்கஷ்டத்தையும் கொடுக்கலாம்.

மகரம்:

வம்பு வழக்குகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு நல்ல ஆதரவு கொடுப்பார்கள். அத்தை வழி உறவால் நன்மை உண்டாகும்.

கும்பம்:

இன்று மன அமைதியை தேடி செல்வீர்கள். வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

மீனம்:

இன்று மனதில் ஆயிரம் சிந்தனை உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும் நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US