நாளைய ராசி பலன் (15-03-2026)
மேஷம்:
இன்று கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். மனரீதியாக சந்தித்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்:
இன்று கல்வி தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக சந்தித்து வந்து கடன் பிரச்சனை விலகும். வாழ்க்கை துணையுடன் சில கருத்து மோதல்கள் வரலாம்.
மிதுனம்:
குழந்தைகள் விஷயங்களில் சற்று பொறுமையாக கையாள்வது அவசியம். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது குடும்பத்தில் நன்மை உண்டாகும். தாய் உடல் நிலையில் மிகுந்த கவனம் வேண்டும்.
கடகம்:
இன்று செய்யும் காரியங்களில் சில தடைகளை சந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை கவனமாக கையாள்வது அவசியம். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பாராத பண வரவு கிடைக்கும். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.
கன்னி:
இன்று முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணத்தை நிறைவேற்றுவீர்கள். உயர்கல்வி படிப்பிற்கான தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
விருச்சிகம்:
எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உடன் பிறந்தவர்களிடம் சற்று கவனமாக சொந்த விஷயங்களை பகிர்வது அவசியம்.
தனுசு:
கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்:
இன்று வீடு நிலம் வாங்குவதை பற்றி யோசனை உண்டாகும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நன்மையான நாள்.
கும்பம்:
உங்களிடம் வம்பு வளர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த கசப்புகள் விலகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். மதியமேல் நற்செய்தி வந்து சேரும்.
மீனம்:
ஆன்மீக பணியில் பங்கு கொள்வீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |