இன்றைய ராசிபலன் (24-03-2026)
மேஷம்:
இன்று உங்களுடைய விருப்பம் நிறைவேறும் நாள். நண்பர்களுடன் தொழிலை பற்றிய ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
இன்று எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் விலகும். தந்தையுடன் பேச்சு வார்த்தையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அத்தை வழி உறவுகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும்.
மிதுனம்:
இன்று சொத்து தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினர் உடைய உண்மை முகத்தையும் அவர்களின் நோக்கத்தையும் புரிந்து கொள்வீர்கள். மதியமேல் நன்மை உண்டாகும்.
கடகம்:
காலை முதல் மனம் பதட்டமாக காணப்படும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
சிம்மம்:
உங்க குடும்பத்தில் உங்களை மீது சிலர் வெறுப்புகளை காண்பிப்பார்கள். அரசியல் தொடர்பான விஷயங்களை சற்று நிதானமாக கையாள்வது அவசியம். வேலை பளு அதிகரிக்கும்.
கன்னி:
வெளிநாடு தொடர்பான வியாபாரங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுக்காக ஒரு சில விஷயங்களை செய்யும் பொழுது சில அவப்பெயர்களை சந்திக்கலாம்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். காதல் வாழ்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.
விருச்சிகம்:
இன்று கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதமும் சண்டையும் வரும். புதிய உறவுகளின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரி உறவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
குடும்பத்தில் உங்களுக்கு எதிராக இருந்தவர் விலகிச் செல்வார். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். சொத்து விவகாரங்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
மகரம்:
வேலை தொடர்பாக புதிய அனுபவங்களையும் புதிய நபர்களையும் சந்திப்பீர்கள். உங்களிடம் வீண் வாக்குவாதம் செய்பவர்களிடம் இன்று நிதானமாகச் செல்லுங்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
கும்பம்:
தொழில் ரீதியாக உள்ள ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். விவசாயம் செய்பவர்கள் முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளப் போகிறார்கள். நன்மையான நாள்.
மீனம்:
இன்று உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்வீர்கள். மனதிற்கு பிடிக்காத எந்த ஒரு செயலையும் இன்று செய்ய வேண்டாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |