இன்றைய ராசி பலன் (05-05-2026)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் சில முக்கியமான நபரின் வருகையால் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். பொருளாதாரத்தில் சந்திந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.
ரிஷபம்:
சொந்தங்கள் மத்தியில் சற்று கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். திடீர் வெளியூர் செல்ல நேரலாம். மனதில் உள்ள கவலைகள் விலகும்.
மிதுனம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். உங்கள் மனதில் உள்ள கவலைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள்.
கடகம்:
மனதில் உள்ள கவலைகள் விலகும். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். பொழுது போக்கு இடங்களுக்கு செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
தேவை இல்லாத பேச்சு வார்த்தைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வியாபாரத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகும்.
கன்னி:
உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொழுது குடும்பத்தின் ஆலோசனை பெறுவீர்கள். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் உள்ள சிக்கல் விலகும்.
துலாம்:
வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்களை செய்து கொள்வீர்கள்.
விருச்சிகம்:
வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். உங்களை பற்றி தவறாக பேசியவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் சில எதிர்பாராத சிக்கல் வரலாம்.
தனுசு:
இன்று பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும்.நண்பர்களுடன் சுற்றுலா பயணம் செல்வீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடிவரும். தாய் உடல் நிலையில் கவனம் வேண்டும்.
கும்பம்:
வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கியமான வாய்ப்புகள் அமையும். ஒரு சிலருக்கு கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த குழப்பங்கள் விலகும்.
மீனம்:
மனதில் ஆயிரம் சிந்தனைகளும் குழப்பங்களும் தோன்றி மறையும். ஒரு சிலருக்கு திடீர் பிரச்சினைகள் வரலாம். தேவை இல்லாமல் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிராதீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |