நாளைய ராசி பலன் (24-05-2026)

Report

 மேஷம்:

இன்று குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து செல்லும். பொருளாதாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. உடன் பிறந்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

ரிஷபம்:

இன்று நண்பர்களை சந்திப்பீர்கள். வங்கி தொடர்பான விஷயங்களால் சிலருக்கு மன கசப்புகள் வரும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். தாய் வழி உறவால் இருந்து வந்த மன கசப்புகள் விலகும்.

மிதுனம்:

இன்று வாழ்க்கை தொடர்பாக முக்கியமான முடிவுகள் எதுக்கும் நாள். கடந்த நினைவுகளால் சில சங்கடம் வரலாம். தந்தை உடல் ஆரோக்கியத்தில் முழுமையமான கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்:

மன ரீதியாக சில போராட்டங்களை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வேலை பளு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உண்டாகும்.

சிம்மம்:

வியாபாரத்தில் சில சிக்கல் வந்து செல்லும் மதியம் சரி ஆகும். தேவை இல்லாமல் பதட்டம் மற்றும் கோபம் கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.

கன்னி:

தம்பி வழி உறவால் சில சிக்கல் சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் சந்தித்த சிக்கல் விலகும். மனதில் அமைதி உண்டாகும்.

துலாம்:

உங்கள் கனவு நினைவு ஆகும் நாள். அரசியல் தொடார்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும். பொழுது போக்கு விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

விருச்சிகம்:

உங்கள் மனதில் உள்ள குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மூன்றாம் நபரிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். சிலர் உடல் பயிற்சி போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

தனுசு:

திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உங்களை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். அரசியல் தொடர்பாக உங்களின் வட்டாரம் விரிவடையும் நாள்.

மகரம்:

குழந்தைகளின் நலனில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கியமான வழி பிறக்கும். வேலை மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நன்மையான நாள்.

கும்பம்:

நண்பர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். சொந்தங்களிடம் தேவை இல்லாத மன கசப்புகள் வரலாம். பூர்வீக சொத்து விற்கும் யோசனை வரலாம். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

மீனம்:

உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். இடமாற்றம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாள் பிரச்சனை முடிவு பெரும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US