நாளைய ராசி பலன் (29-05-2026)

Report

 மேஷம்:

இன்று நீங்கள் ஒருவரிடம் பேசும் பொழுது தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை உங்களுடைய சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

ரிஷபம்:

மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் விலகும். உடன் இருப்பவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள்.

மிதுனம்:

வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணத்தை தைரியமாக எடுத்து வைப்பீர்கள். சுயநலமாக சிந்தித்து சில விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். நன்மையான நாள்.

கடகம்:

எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். சொந்தங்களால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.

மகாபாரதம்: நம் வாழ்க்கையை வழிநடத்தும் கிருஷ்ண பகவானின் 7 பொன்மொழிகள்

மகாபாரதம்: நம் வாழ்க்கையை வழிநடத்தும் கிருஷ்ண பகவானின் 7 பொன்மொழிகள்

சிம்மம்:

வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி:

பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். கடந்த கால நிகழ்வுகளை எண்ணி மனம் வருத்தப்படலாம். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பழகிக்கொள்வீர்கள்.

துலாம்:

வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உருவாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு என்ன மலர்கள் சாற்றினால் என்ன பலன் தெரியுமா ?

பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு என்ன மலர்கள் சாற்றினால் என்ன பலன் தெரியுமா ?

விருச்சிகம்:

குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

தனுசு:

குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். ஒரு சிலர் எலும்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

மகரம்:

நீங்கள் நினைத்த வேலை தடையில்லாமல் நடக்கும். சொந்தங்கள் மத்தியில் ஏற்பட்ட விரிசல் நீங்கும். ஒரு சிலருக்கு திடீர் என்று பொருளாதார நெருக்கடிகள் வரலாம். சிக்கனம் அவசியம்.

கும்பம்:

நண்பர்களுக்காக சில முக்கியமான விஷயங்களை செய்ய முன்வருவீர்கள். யாருக்கும் தேவை இல்லாத வாக்குறுதிகள் கொடுக்காதீர்கள். ஒருவரிடம் பழகும் பொழுது கவனமாக இருப்பது அவசியம்.

மீனம்:

வேலைப்பளு அதிகரிக்கும். மன அழுத்தம் ஒரு சிலருக்கு உண்டாகலாம். எதிர்கால பயம் விலக ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு நல்ல முன்னேற்றமும் மனத்தெளிவும் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US