நாளைய ராசிபலன் (30-05-2026)

Report

மேஷம்:

இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் வருமான உயர்வும் கிடைக்கும். ஒரு சிலருக்கு நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமான காரியங்களை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:

வாழ்க்கை துணையுடன் எப்படி அனுசரித்து செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு தந்தை வழியின் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

மிதுனம்:

வேலைப்பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேச வேண்டும். மூன்றாம் நபரிடம் தேவை இல்லாமல் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கடகம்:

இன்று நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு உடல் சோர்வு மன சோர்வு உண்டாகலாம். கணவன் வழியே ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.

சிம்மம்:

இன்று தொழில் ரீதியாக உங்களுக்கு முக்கியமான நாள். உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிடித்த விஷயங்களை செய்வீர்கள்.

கந்த குரு கவசம் படிக்கும் பொழுது தவறியும் இந்த தவறுகள் செய்து விடாதீர்கள்

கந்த குரு கவசம் படிக்கும் பொழுது தவறியும் இந்த தவறுகள் செய்து விடாதீர்கள்

கன்னி:

வியாபாரம் தொடர்பாக நீங்கள் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். ஒரு சிலருக்கு கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வண்டி வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.

துலாம்:

நீங்கள் உங்களை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய நாள். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும்

விருச்சிகம்:

நீங்கள் கடந்த கால தவறுகளை எண்ணி மனம் வருந்துவீர்கள். பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவது நன்மை தரும். தாயின் முழு ஆதரவும் தந்தையின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு;

மனதில் உள்ள ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களில் கவனமாக இருங்கள். கால் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

தவறியும் உங்கள் வீடுகளில் அனுமன் படத்தை இந்த திசையில் வைத்து விடாதீர்கள்

தவறியும் உங்கள் வீடுகளில் அனுமன் படத்தை இந்த திசையில் வைத்து விடாதீர்கள்

மகரம்:

தந்தை வழி சொத்துக்களால் இருந்து வந்த பிரச்சனை விலகும். தாயிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள். இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சில சிக்கல் வரலாம்.

கும்பம்:

இன்று திடீரென்று வேலைக்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகளின் படிப்புகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். கல்வியில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

மீனம்:

இன்று நீங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியோடு இருக்கக்கூடிய நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தது போல் கைக்குடி வரும். சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய அமைப்பு உண்டாகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US