பண வரவு வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த மந்திரம் பாராயணம் செய்ய தவறாதீர்கள்
மனிதர்களுடைய வாழ்க்கையில் இன்னல்களும் கஷ்டங்களும் வருவது இயல்பு. ஆனால் அதிலிருந்து மீண்டு நம்முடைய இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதும் வாழ்க்கையை சரியாக மாற்றுவதும் நம் கைகளில் மட்டுமே இருக்கிறது.
இதற்கு மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். அதாவது நம்முடைய துன்பத்தை நினைத்து வருந்தி கொண்டே இல்லாமல் அந்த கடிமான நேரங்களில் இருந்து எப்படி விடுதலை பெறுவது என்பதை பற்றியும் சிந்தித்து இறை வழிபாடு மேற்கொண்டு கை மீறி போன விஷயங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதை பற்றி மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும்.
அப்படியாக, ஒரு சிலர் திடீர் என்று கண்ணை மூடி திறப்பதற்கு முன்பாக பொருளாதார நெருக்கடிகளில் மாட்டி விடுவார்கள். அவ்வாறான வேலைகளில் அவர்கள் மனம் தளராமல் அவர்களுடைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கான சரியான வேலைகளை செய்வதோடு இறைவனையும் தொடர்ந்து வழிபாடு செய்தால் கட்டாயம் அதில் இருந்து மீண்டு விடலாம்.

அந்த வகையில், நம்முடைய இந்து மதத்தில் செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அந்த நபர் செல்வ செழிப்போடு வாழும் பாக்கியம் கிடைக்கிறது.
அப்படியாக, மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய மனமானதும் தூய்மையாக இருக்க வேண்டும். மனத்தூய்மையோடு உடல் தூய்மை கலந்து நாம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் முன்பு ஒரு நெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வரும் பொழுது கட்டாயம் வெகு விரைவில் நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களை காணலாம்.
மந்திரங்கள் :
தெய்வ வஷ்ய, பூத வஷ் லோக வஷ்ய ராஜ வஷ்ய,
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய,
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவபிராணிகளும்
உன் வசமானால் போல் எனது, வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!

இந்த மந்திரத்தை முடிந்தவரை பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் முன்பாக தீபம் ஏற்றி 108 முறை பாராயணம் செய்வதை முறையாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து நீங்கள் முழுமனதோடு உங்களுடைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விரைவில் மீண்டு எல்லோர் முன்னிலையில் உங்களை உயர்ந்த வாழ்க்கைக்கு கூட்டிச் செல்ல மகாலட்சுமியின் ஆசீர்வாதம் வேண்டும் என்று மனதார வேண்டினால் கட்டாயம் மாற்றம் உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |