நாளைய ராசி பலன்(10-11-2025)
மேஷம்:
ஒரு சிலருக்கு காலை முதல் உடல் நிலையில் சில தடுமாற்றங்கள் சந்திக்கலாம். மதியம் மேல் உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மிகவும் பரபரப்பாக செயல்படக்கூடிய நாள்.
ரிஷபம்:
தாய் மாமன் வழி உறவுகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு சில கஷ்டங்களை கொடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
மிதுனம்:
உங்கள் வீடுகளில் சில மன கசப்புகளை சந்திக்கும் நாள். நம்பிய ஒருவர் உங்களுக்கு உதவி செய்யாமல் போகலாம். வெளிநாடு சுற்றுலா செல்லும் யோகம் உருவாகும். நன்மையான நாள்.
கடகம்:
கடன் பிரச்சனை விலக சில முக்கிய ஏற்பாடுகள் செய்வீர்கள். மதியம் மேல் உங்கள் வேலை பளு குறையும். அத்தை வழி உறவுகளால் உங்களுக்கு உதவியும் ஆறுதலும் கிடைக்கும் நாள்.
சிம்மம்:
இன்று உங்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று நேரம் செலவு செய்வீர்கள். வீடுகளில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தையில் கவனம் தேவை. உடல் நிலையில் முன்னேற்றம் காணும் நாள்.
கன்னி:
நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். தந்தை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநபர்கள் யாரையும் நம்பி எந்த வேலையும் கொடுக்காதீர்கள்.
துலாம்:
வேலையில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்ப்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகும் நாள்.
விருச்சிகம்:
உடல் நிலையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள். பெற்றோர்கள் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். கல்லுரி மாணவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு:
தேவை இல்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டிய நாள். குடும்பத்தில் யாரும் கேட்காமல் உங்கள் ஆலோசனை கொடுக்காதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மகரம்:
தாய் வழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விலகிய சொந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். சட்டம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கும்பம்:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்து செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்ப நெருக்கடி விலகும்.
மீனம்:
நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சமுதாயத்தில் உங்களுக்கு நற்பெயர் உயரும். நீங்கள் செய்யும் வேலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |