நாளைய ராசி பலன்(14-11-2025)
மேஷம்:
இன்று நீங்கள் வழக்கு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சிலர் சட்ட சிக்கல்களில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மதியம் மேல் தான் சற்று நிம்மதியான நிலை உண்டாகும்.
ரிஷபம்:
இன்று உடல் நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். நட்புகள் இடையே சில சிக்கல்கள் வரலாம். எதிர்பாராத நபர்களால் சிலர் உதவிகள் கிடைத்தாலும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
இன்று சிலருக்கு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரலாம். காலை முதல் சற்று பரபரப்பாக இருப்பீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
கடகம்:
உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத வார்த்தைகளை பயன் படுத்துவதால் சண்டைகள் வரலாம். கணவன் மனைவி இடையே இருந்த மோதல்கள் விலகும். நன்மையான நாள்.
சிம்மம்:
இன்று எதிர்பாராத அவப்பெயர் சந்திக்கும் நாள். தற்பெருமை பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். வருமானத்தில் சந்தித்த தடைகள் யாவும் விலகி முன்னேற்றம் அடையும் நாள்.
கன்னி:
சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கான மதிப்பு உயரும் நாள். விலகி சென்ற உறவுகள் உங்களை மீண்டும் வந்து பேசுவார்கள். வழக்கு விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும்.
துலாம்:
இன்று இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உங்களை சுற்றி நபர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். நட்புகள் வட்டாரம் விரிவடையும். நிதானமாக யோசித்து செயல்படவேண்டிய நாள்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும்.பணவரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
தனுசு:
இன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான நேரம் செலவழிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். மதியம் மேல் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
மகரம்:
தொழில் ரீதியாக நீங்கள் இன்று நிறைய விஷயங்களை கற்று கொள்வீர்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். அமைதியாக இருந்து விட்டால் நாளைய மிக எளிதாக சண்டை இல்லாமல் கடக்கலாம்.
கும்பம்:
இன்று எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்காதீர்கள். வீடுகளில் உள்ள பிரச்சனைகள் இன்னும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. கவனமாகி இருக்க வேண்டிய நாள்.
மீனம்:
இன்று மனதில் ஆழ்ந்த சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய பயம் வரும். ஆன்மீக பாதையில் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். நன்மையான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |