நாளைய ராசி பலன்(19-11-2025)
மேஷம்:
இன்று உங்கள் சுற்றி உள்ளவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சிலருக்கு மதியம் மேல் எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும்.
ரிஷபம்:
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இன்று முடிந்த வரை உங்களின் சொந்த விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
மிதுனம்:
இன்று பழைய நினைவுகளை நினைத்து மகிழ்சசி அடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதலும் அன்பும் இருக்கும். காதல் வெற்றி பெரும் நாள்.
கடகம்:
உங்கள் மனதில் உள்ள குழப்பங்களுக்கு இன்று விடை கிடைக்கும் நாள். சுற்றி உள்ளவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் நாள். பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வந்து பேசும் நாள்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் சில தடைகளை கடந்து வெற்றி பெரும் நாள். முக்கியமான நபரை சந்திக்கும் நாள். அரசு வழியே ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். மதியம் மேல் உடல் நிலையில் கவனம் தேவை.
கன்னி:
திருமண தொடர்பான பேச்சுக்களில் சற்று நிதானம் தேவை. தேவை இல்லாமல் மூன்றாம் நபரிடம் குடும்ப வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளியே செல்லும் பொழுது கவனம் தேவை.
துலாம்:
இன்று உங்கள் குடும்பங்களின் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கை துணை உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
விருப்பம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். செயல்களில் நன்மை உண்டாகும்.
தனுசு:
உங்கள் வேலை இன்று எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சனி, ராகுவால் செல்வாக்கு உயரும். மனக்குழப்பம் தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
மகரம்:
இன்று உங்கள் குழந்தைகள் மீது முழு அக்கறையும் அன்பும் காட்டுவீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்படும் நாள். தெரிந்தவர்களின் வழியே நினைத்த காரியம் நிறைவேறும்.
கும்பம்:
எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்:
மனதில் உங்களுக்கு குழப்பங்கள் தோன்றி மறையும். உங்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |