இன்றைய ராசி பலன்(25-10-2025)
மேஷம்:
உங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி பெருவிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குழந்தைகள் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்படலாம். தொழில் ரீதியாக பதட்டமான நாள்.
ரிஷபம்:
கணவன் வழி உறவுகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயரக்கூடிய நாள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம்:
மனதில் புதிய சிந்தனை பிறக்கும்.கடன் தொல்லைகளிலிருந்து விடுபடக்கூடிய அற்புதமான நாள். வியாபாரத்தில் உங்களுடைய செயல்பாடுகளை மாற்றுவதால் லாபம் பெறுவீர்கள்.
கடகம்:
உங்களுடைய அறிவைக் கொண்டு ஒரு முக்கியமான செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப பிரச்சினைகள் நல்ல முறையில் முடிவிற்கு வரும். வெற்றி பெறும் நாள்.
சிம்மம்:
பொருளாதார ரீதியாக சந்தித்த நெருக்கடிகள் அனைத்தும் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு உயரக்கூடிய நாள். சகோதரி வழி பிரச்சனை விலகும்.
கன்னி:
இன்று மிகவும் தைரியமாக ஒரு முடிவை எடுக்கக்கூடிய நாள். ஆடம்பர பொருட்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். தொழில் ரீதியாக சில அலைச்சல் உண்டாகலாம்.
துலாம்:
இன்று உங்களுடைய நட்பு வட்டாரங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பயணங்கள் வழியே சாதகமான பலன் கிடைக்கும். எதிரிகள் தொல்லை முற்றிலுமாக விலகக் கூடிய நாள்.
விருச்சிகம்:
முன் கோபத்தை குறைத்துக் கொண்டால் நன்மைகள் நடக்கும். கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
தனுசு:
இன்று முகம் தெரியாத நபர்களால் சில உதவிகளை கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளால் சில அலைச்சல் உண்டாக்கும். அரசு காரியங்களில் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மகரம்:
குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகும். வேலையில் உங்களுடைய பங்களிப்பு பாராட்டுகளை பெரும் விதத்தில் அமையும். லாபம் பெறக்கூடிய நாள்.
கும்பம்:
இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக அனுபவத்தை பெறுவீர்கள். முக்கிய நபர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மீனம்:
வாழ்க்கை துணையின் உறவினர்களால் சில ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தந்தை வழியே சில எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |