இன்றைய ராசி பலன்(07-09-2025)
மேஷம்:
அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் விலகும்.
ரிஷபம்:
இன்று ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். அக்கம் பக்கத்தினரிடமும் சற்று கவனமாக பழக வேண்டும். வாழ்க்கை துணையிடம் வீண் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது மகிழ்ச்சியை உண்டாக்கும்.
மிதுனம்:
இன்று உங்கள் மனதில் தேவையில்லாத குழப்பமும் பயமும் ஏற்படும். குடும்பத்தை பற்றிய கவலை உண்டாகும். தொலைதூர பயணத்தால் வாழ்க்கையில் சில சங்கட்டமான நிலையை சந்திப்பீர்கள்.
கடகம்:
இன்று வம்பு வழக்குகள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். புதிய நட்புகளின் அறிமுகத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்புகள் தேடி வரும்.
சிம்மம்:
நண்பர்கள் வட்டாரத்தில் உங்களுக்கு மதிப்புகள் உயரும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனை கேட்டு நடந்து கொள்வார்கள். வீண் பிடிவாதத்தை தவிர்த்தால் வெற்றி பெறலாம்.
கன்னி:
இன்று பலருக்கும் மனதில் தேவையில்லாத குழப்பம் சந்திக்க நேரும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு வழிபாடு செய்து வருவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்கு இன்று மனதில் குழப்பங்கள் தோன்றும். மதியிம் மேல் இந்த குழப்பத்திற்கு பதில் கிடைக்கும். சொந்த பந்தங்கள் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று வீடுகளில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உண்டு. மிக கவனமாக வார்த்தையை பயன்படுத்த வேண்டும். கணவர் வீட்டார் வழியாக உங்களுக்கு சில சங்கடங்கள் நிலவ வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
இன்று உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு பிடித்த நபர்கள் வழியாக சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் வழி சொந்தங்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள்.
மகரம்:
இன்று நீங்கள் பதட்டத்துடன் செயல்படாமல் நிதானத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உங்களுடைய ரத்த அழுத்தத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். பிரச்சனைகள் மறப்பதற்கு தியானம் செய்யுங்கள்.
கும்பம்:
இன்று உங்களுடைய சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகலாம். இன்று தேவையில்லாத பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நன்மையான நாள்.
மீனம்:
இன்று உங்கள் குடும்பங்களில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு திடீர் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







