இன்றைய ராசி பலன் (22-09-2026)
மேஷம்:
இன்று தொழில் ரீதியாக உங்களுக்கு ஒரு முக்கியமான நபரை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் வரும். பொருளாதாரம் முன்னேற்றமும் சிக்கலும் விலகும்.
ரிஷபம்:
எதையும் தீரா ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். வருமானத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். எதிரிகள் தொல்லை விலகும். வழக்கில் வெற்றி உண்டாகும்.
மிதுனம்:
தொழில் ரீதியாக உங்களுக்கான போட்டிகளை நீங்கள் சந்திப்பீர்கள். வம்பு வழக்குகளில் சிக்காமல் இருப்பது நல்லது. எதையும் ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.
கடகம்:
வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். வாழ்க்கை துணை வழியாக நற்செய்தியை சேர்ப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான கவலையும் பயமும் வரலாம்.
சிம்மம்:
அரசியல் வட்டாரங்களில் உங்களுடைய அந்தஸ்து உயரும். தொழில் ரீதியாக வேலையாட்களிடம் நீங்கள் கவனமாக செயல்படுவது அவசியம். கடன் தொல்லை விலகும்.
கன்னி:
குழந்தைகள் வழியே நற்செய்திகள் கேட்பீர்கள். சொந்தங்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். திருமண வாழ்க்கையில் சற்று கவனமாக செயல்படுவது அவசியம்.
துலாம்:
இன்று திருமண வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகும். நன்மையான நாள்.
விருச்சிகம்:
வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொந்தங்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். பண விஷயங்களில் கவனம் வேண்டும்.
தனுசு:
கடன் தொல்லை முடியும். குடும்பத்தில் காலை முதல் சில சலசலப்புகளை சந்திப்பீர்கள். குடும்பத்துடன் ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் மதிப்பு உயரும்.
மகரம்:
இன்று குடும்பத்துடன் நீங்கள் முக்கியமான வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கான நிலை உருவாகும். பிள்ளைகள் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்:
மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று முக்கியமான நாளாக அமையப்போகிறது. உங்களுடைய வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள்.
மீனம்:
உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொந்தங்களிடம் தேவையில்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். கவனம் வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |