இன்றைய ராசி பலன்(09-08-2025)
மேஷம்:
இன்று பணி சுமை அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகளால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். பொருளாதார சிக்கல்களில் சந்தித்த தடைகள் விலகும்.
ரிஷபம்:
கோயில் வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பெற்றோர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வேலையில் முன்னேற்றமும் அங்கீகாரமும் கிடைக்கும்.
மிதுனம்:
வாழ்க்கை பற்றிய குழப்பங்கள் உருவாகும். உறவினர்களால் சில சங்கட சூழ்நிலை சந்திப்பீர்கள். உங்கள் மீது சில அவதூறு வழக்குகள் வரலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.
கடகம்:
தொடங்கிய செயல் நல்ல முடிவைபெறுமா என்ற அச்சம் உண்டாகும். மதியம் மேல் மனதில் நல்ல தெளிவு பிறக்கும். உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விலகும். நம்பிக்கையான நாள்.
சிம்மம்:
வியாபாரத்தில் சந்தித்த நஷ்டத்தை சரி செய்வீர்கள். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. வீடுகளில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.
கன்னி:
இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்த இறை வழிபாடுகளில் ஈடுபடலாம். சிலர் உண்மை முகத்தை புரிந்து கொள்ளும் நாள்.
துலாம்:
இன்று அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலை சுமையால் உடல் சோர்வு அடைவீர்கள். மருத்துவ செலவுகளை சந்திக்கும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். மாலை மேல் நற்செய்தி வரும்.
விருச்சிகம்:
நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி நல்ல முடிவைப் பெறும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மனதில் மன்னிப்பு குணம் தோன்றும். உறவுகளால் சந்தித்த சங்கடங்கள் விலகும்.
தனுசு:
இன்று பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை உருவாகும். மனதில் உள்ள பாரத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். நினைத்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
மகரம்:
உங்கள் முன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டால் வெற்றி அடையலாம். மன குழப்பங்கள் விலக தியானம் மேற்கொள்வீர்கள். பெரியவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
கும்பம்:
வழக்கில் சந்தித்த பிரச்சனை விலகும். முக்கியமான முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் உருவாகும். திருமண பேச்சுக்களை இன்று தவிர்ப்பது நல்லது. கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்:
இன்று குழந்தைகள் பற்றிய கவலை விலகும். மாணவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசு அலுவலர்களுக்கு நல் வாய்ப்பு உருவாகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







