இன்றைய ராசி பலன் (20-08-2025)

Report

மேஷம்:

வேண்டாம் என்று கைவிடப்பட்ட பழைய முயற்சிகளை மீண்டும் தொடங்குவீர்கள். பொருளாதார கணக்கை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் வரும்.

ரிஷபம்:

உடன் வேலை செய்யும் நபரை பற்றி புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் உண்டான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மன கஷ்டங்கள் விலகும்.

மிதுனம்:

எதிர்கால வாழ்க்கையை பற்றிய சிந்தனை தோன்றும். தந்தைக்காக சில மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்:

சொந்தங்ள் உங்களை தவறாக புரிந்து கொண்டு உங்களை விட்டு செல்வார்கள். மாமியாருடன் ஏற்பட்ட விரிசல் விலகும். மருத்துவ செலவுகளை சிலர் சந்திக்க கூடும். சொந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

சிம்மம்:

தொழில் வாழ்க்கையில் நஷ்டங்களை சந்திக்க நேரலாம். கவனமாக செயல்பட வேண்டும். முடிந்தவரை கடன் கொடுக்க வேண்டாம். வீடு கட்ட ஏற்பாடு செய்யும் வேலைகள் சாதகமாக அமையும்.

துலாம்:

உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகி மனம் விட்டு பேசுவீர்கள். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

ஜோதிடம்: அதிக ஞாபக மறதி கொண்ட 3 ராசிகள்

ஜோதிடம்: அதிக ஞாபக மறதி கொண்ட 3 ராசிகள்

 

விருச்சிகம்:

சொந்தங்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பொறாமை படாமல் இருந்தால் சில விஷயங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு:

ஆசிரியர் வேலை செய்பவர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியால் பெருமை அடைவீர்கள். கணவன் வழி உறவால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நன்மையான நாள்.

மகரம்:

இன்று புதிதாக நிறைய விஷயங்களை தேடி தெரிந்துக் கொள்வீர்கள். வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். தவறுகளை நினைத்து வருந்தாமல் அதை சரி செய்து கொள்ளும் நாள்.

கும்பம்:

நண்பர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கைக்காக வரன் தேடுபவர்கள் நிதானமாக செயல்படுங்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.

மீனம்:

எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை செய்வீர்கள். நண்பர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. வாழ்க்கையின் உண்மை நிலையை புரியும் காலம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US