நாளைய ராசி பலன்(30-07-2025)

Report

  மேஷம்:

இன்று உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

இன்று வேலையில் உங்கள் திறமையை வெளிபடுத்துவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீடுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி செல்லும். நன்மையான நாள்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனையை தவிர்க்கலாம்.

கடகம்:

இன்று சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வது அவசியம். உங்களுடைய மூத்த சகோதர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்:

உங்களுக்கு வேலையில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் பெறுவீர்கள். முடிந்த வரை தேவை இல்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கன்னி:

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். இன்று படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் விலகி செல்லும். நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

இந்த 3 ராசிகளுக்கு கடனே இருக்காதாம்- அதிக யோகம் கொண்ட ராசிகள் யார் தெரியுமா?

இந்த 3 ராசிகளுக்கு கடனே இருக்காதாம்- அதிக யோகம் கொண்ட ராசிகள் யார் தெரியுமா?

துலாம்:

உடற்பயிற்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மன அமைதிக்காக தியானம் போன்ற விஷயங்களில் ஈடுபாடு செலுத்துவீர்கள். இறைவழிபாடு சிறந்த மாற்றத்தை வழங்கும்.

விருச்சிகம்:

இன்று வாங்கிய கடன்களை அடைக்கும் நிலை உண்டாகும். உங்கள் மனதில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி செல்லும். சமுதாயத்தில் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும் நாள்.

தனுசு:

குழந்தைகள் உடல் நிலையில் கட்டாயம் அக்கறை செலுத்த வேண்டும். கணவன் மனைவியால் சந்தித்த பிரச்சனைகள் விலகி செல்லும். சில உண்மை முகங்களை புரிந்துக் கொள்வீர்கள்.

மகரம்:

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளியூரிலும் தொடங்க முயற்சி மேற்கொள்வர். சிலர் வசிக்கும் இடத்தை, ஊரை விட்டு வேறு இடத்திற்கு மாறுவதற்கு முயற்சிப்பீர்கள்.

கும்பம்:

உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை அகற்றுவார். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

மீனம்:

இன்று நற்செய்தி உங்கள் மனத்திற்கான அமைதியை கொடுக்கும். குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US