இன்றைய ராசி பலன்(02-06-2025)
மேஷம்:
இன்று பிறர் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். எதையும் துணிந்து செய்வீர்கள். ஒரு சிலருக்கு மதியம் மேல் நினைத்த காரியத்தை சாதிப்பதில் தடங்கல் ஏற்படும்.
ரிஷபம்:
உங்களின் மறைமுக எதிரிகள் விலகி செல்வார்கள். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி செல்லும். ஒரு சிலருக்கு தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்:
இன்று வாழ்க்கை பற்றிய சில உண்மைகள் புரிந்து கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் சில சங்கடம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.
சிம்மம்:
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொலை தூர பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிந்து நடந்து கொள்வீர்கள். நன்மையான நாள்.
கன்னி:
திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து கொள்முதல் செய்வது நன்மையாகும். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள்.
துலாம்:
இன்று உங்கள் மனதில் தெம்பும் தைரியமும் பிறக்கும். புதிய நபர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். வாழ்க்கையை பற்றிய சில புரிதலும் நம்பிக்கையும் உண்டாகும். புத்துணர்ச்சியாக செயல்படும் நாள்.
விருச்சிகம்:
போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருவாய் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.
தனுசு:
இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மனதில் இருந்த குழப்பமும் பயமும் விலகும். சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் சரி ஆகும்.
மகரம்:
வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். வீண் பிரச்சனைகள் இன்று உங்களைத் தேடிவரும். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நட்பால் சில பிரச்னை உண்டாகும்.
கும்பம்:
ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். பணியிடத்தில் உண்டான பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் செயல்கள் லாபமாகும்.
மீனம்:
இன்று ஒரு சிலருக்கு மதியம் மேல் தேவை இல்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வெளியூர் பயணம் லாபமாக அமையும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |