இன்றைய ராசி பலன்(24.11.2024)
மேஷம்
உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோசம் நிலவும்.சகோதரன் சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள்.மனதில் உண்டான சங்கடம் தீரும்.செலவிற்கு ஏற்ற வரவு இருக்கும்.
ரிஷபம்
பல போராட்டங்களுக்கு பிறகு நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள்.நண்பர்கள் இடையே வாக்குவாதம் உண்டாகலாம்.வேலை காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.
மிதுனம்
எதையும் சாதிக்கும் தைரியம் பிறக்கும்.குடும்பங்களோடு குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.சந்தோஷமான நாள்.
கடகம்
பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தினர் விருப்பம் பூர்த்தி செய்வீர்.உங்கள் செயலில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் அவசியம்.ஆடம்பர செலவுகளை தவிர்க்கலாம்.வியாபாரத்தில் சிறு தடுமாற்றம் உண்டாகும்.பிறருக்காக வீண் செலவு உண்டாகும்.
கன்னி
எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும்.பயமும் பதட்டமும் தன்னம்பிக்கையை குறைக்கும்.தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும்.நண்பர்களுடன் வெளியில் சென்று வருவீர்கள்.
துலாம்
நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.படிப்பு தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள்.மாணவர்ளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்.குடும்பத்தில் உண்டான சண்டைகள் விலகும்.
விருச்சிகம்
திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவீர். உங்கள் விருப்பம் நிறைவேறும்.நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.
தனுசு
தாய் வழி ஆதரவு கிடைக்கும்.பிள்ளைகள் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.வீண் பேச்சு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.செய்யும் செயலில் வெற்றி காண்பீர்கள்.
மகரம்
புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் செயல் இன்று இழுபறியாகும்.பிரச்னை தேடிவரும். எதிலும் இன்று நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
கும்பம்
வேலைக்காக அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.இனிமையான நாள்.
மீனம்
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.போலி நண்பர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.மூன்றாம் நபர் பேசும் பேச்சுக்களை கேட்பதை தவிர்க்க வேண்டும்.எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |