இன்றைய ராசி பலன்(20.10.2024)

Report

மேஷம்

குடும்பத்தினர் தேவை அறிந்துசெயல்படுவீர்கள்.கடன்களை அடைப்பீர்கள்.நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் மன வருத்தம் ஏற்படும்.செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.உழைப்பு அதிகரிக்கும். திட்டமிடாமல் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.

மிதுனம்

தேவை இல்லாத செலவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இன்று எடுக்காமல் இருப்பது நல்லது.பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

கடகம்

வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.முயற்சிக்கேற்ற வருவாய் வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.ஒரு சிலர் திருப்பணிக்கு உதவி செய்வர்.

சிம்மம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

கன்னி

வருமானம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும்.பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறி பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.மனம் நிம்மதி அடையும்.

தெய்வங்களின் பூஜை பொருட்களும் அதன் முக்கியத்துவமும்

தெய்வங்களின் பூஜை பொருட்களும் அதன் முக்கியத்துவமும்


துலாம்

நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.வியாபார போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். அக்கம் பக்கத்தினருடன் வாக்கு வாதம் உண்டாகும். அமைதி காப்பது நல்லது.

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்த சண்டைகள் விலகும்.உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை விலகி முன்னேற்றம் காண்பீர்கள்.

தனுசு

பொது நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் சூழல் உருவாகும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மகரம்

பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.விழிப்புடன் செயல்படுவதால் உங்கள் வேலை வெற்றியாகும்.

கும்பம்

வருமானத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். மனம் குழப்பமடையும். உங்கள் விருப்பம் இழுபறியாகும்.அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். ஒரு சிலர் வீண்பழிக்கு ஆளாவீர்.

மீனம்

வரவேண்டிய பணம் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US