கார்த்திகை மாதத்தில் இதை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகுமாம்
கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கார்த்திகை மாதத்தில் இருக்கக்கூடிய ஆன்மீக சிறப்புகள் என்னவென்று பார்ப்போம்.
கார்த்திகை மாத ஆன்மீக சிறப்புகள் :
1.கார்த்திகை மாதத்தில் நாம் சிவலிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுதும் வில்வ இலை மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்ற பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி கிடைக்கிறது.
2. கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின் பொழுது நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை பெறுகிறார்கள்.
3. விஷ்ணு பகவானின் கார்த்திகை மாதத்தில் வாசனை மலர்களால் பூஜை செய்பவர்களுக்கு தேவர்களும் அடைவதற்கு அரிதான மோட்ச நிலையை அடையக்கூடிய அருள் கிடைக்கிறது.

4. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் விலகுகிறது.
5. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி தினத்தோடு வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
6. கார்த்திகை திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்வது ஒரு நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
7. இந்த கார்த்திகை மாதத்தில் தீபங்கள் ஏற்றி வைப்பதும் இல்லங்களில் காலை மாலை நேரங்களில் விளக்கேற்றுவதும் நம்முடைய குடும்பங்களில் மகிழ்ச்சியையும் மங்களத்தையும் தந்து வாழ்க்கையை ஒளிமயமாக்கும்.
8. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்ய முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
9. கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
10. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
11. கார்த்திகை கிரிவலம் செல்கின்ற பொழுது மழை பெய்தால் அந்த மழையில் நனைகின்ற பொழுது தேவர்களுடைய ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

12. கார்த்திகை மாதம் வரக்கூடிய ஏகாதசிக்கு மறுநாள் துளசி தேவியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லிமரமாக தோன்றியவர் என்பதால் கார்த்திகை ஏகாதசி என்று துளசி செடியுடன் நெல்லி மரத்தடியில் பூஜை செய்வது சிறப்பு.
நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்து பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவு நினைத்த வரன் அமையும் என்பதை நம்பிக்கை.
13.கார்த்திகை மாதம் திருக்குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதரையும் அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும்.
14. கார்த்திகை மாதத்தில் தெய்வ திருப்பணிகளில் ஈடுபட்டால் நமக்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கிறது. அதோடு, கார்த்திகை மாதத்தில் பகவத் கீதை படித்தால் மன அமைதி கிடைக்கும்.
15. கார்த்திகை தீபத்திருநாள் அன்று கிழக்கு நோக்கி விளக்கேற்றி வழிபாடு செய்தால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லைகள் நீங்கும்.
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |