மன தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்க தினமும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஸ்தோத்திரம்
பொதுவாக, எல்லோரும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நேரங்களில் ஒரு வலிமைமிக்க வீரன் கூட அவன் மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையை இழப்பதற்கான சூழ்நிலை வரலாம்.
அந்த நேரத்தில், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே இருக்கக்கூடிய வித்தியாசம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியும், ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வதின் பலன்களை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
உலகம் போற்றும் காவியங்களில் இராமாயணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ராமாயணத்தில் ஒரு தருணத்தில் ராவணனுடன் இறுதிப் போரை எதிர்கொண்டிருந்தார் ஸ்ரீ ராமர். அவரிடம் அளவற்ற வலிமை, அறிவு, தெளிவுபான நோக்கம் என எல்லாம் இருந்த போதிலும் போரின் சோர்வு மற்றும் மனக்கவலை, சூழ்ந்து இருந்தது.
அந்த சூழ்நிலையில் தான் அகத்திய முனிவர் மன பயம், கவலை சோர்வு ஆகியவற்றை மாற்றக்கூடிய ஒரு அற்புதமான ரகசியத்தை ஸ்ரீ ராமருக்கு எடுத்துரைத்தார். அது எந்த ஒரு ஆயுதமும் அல்ல, ஒரு பெரிய படையும் அல்ல. அது ஒரு தெய்வீக ஆற்றலால் வலுப்பெறும் தன்னம்பிக்கை. அந்த புனிதமான ரகசியம்தான் "ஆதித்ய ஹிருதயம் ஸ்தோத்திரம்" ஆகும்.

வீரர்களுக்கும் சில நேரங்களில் சந்தேகம் ஏற்படும்:
மனிதர்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டங்களில் அவர்களுடைய முழு தன்னம்பிக்கையை இழந்து சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறு இராவணனுக்கு எதிராக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்த ஸ்ரீ ராமருக்கு அவருடைய வலிமையை மட்டும் அல்லாமல் மன உறுதியையே கூட சோதிக்கும் அளவில் ஒரு பெரிய சவால் காத்திருந்தது.
அதாவது போரின் முடிவு என்னவாக இருக்கும்? என்ற நிச்சயமற்ற நிலையும் அந்த இடத்தில் காணப்பட்டது. இங்கே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் எப்பொழுதும் பயம் ஏற்படுவது என்பது ஒருவருடைய பலவீனத்தை குறிக்காது என்பதை நமக்கு இந்த சம்பவம் உணர்த்துகிறது. அதாவது, ஒருவருடைய வலிமை அவருடைய சந்தேகங்களையும் அச்சங்களையும் எதிர்கொள்ளும் விதத்தில் தான் அடங்கி இருக்கிறது.
உண்மையில் வாழ்க்கை என்கின்ற போர்க்களத்தில் நாம் வெற்றி பெறுவதற்கு முன்பாக நம்முடைய மனதில் எழக்கூடிய பயத்தையும் தயக்கத்தையும் முதலில் நாம் வெற்றி கொள்ள வேண்டும்.

அகத்திய முனிவர் எடுத்துரைத்த ஞானம்:
அகத்திய முனிவர் ஸ்ரீ ராமபிரான் உடைய மனக்குழப்பத்தை நன்கு புரிந்து கொள்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சிறந்த வழியை காட்டுகிறார். அதாவது சூரிய பகவானை போற்றி பாடக்கூடிய புனிதமான "ஆதித்ய ஹிருதயம் ஸ்தோத்திரத்தை" உபதேசிக்கிறார்.
இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அடிப்படையான தத்துவம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும் ஒரு ஆழமான பொருளையும் அவை கொண்டிருக்கிறது. ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களில் தலைமையானவராக இருக்கிறார். சூரியன் ஒளி, ஆற்றல், தெளிவு மற்றும் வாழ்வின் அடையாளமாகவும், தன்னம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது.
இந்த நற்பண்புகளை ஒருவருடைய மனதில் நிலை நிறுத்துவதன் வழியாக மனிதன் அவனுக்குள் மறைந்து இருக்க கூடிய ஆற்றலை உணர முடியும். ஆக, "ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம்" என்பது வெறும் பிரார்த்தனையாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருக்கக் கூடிய தெய்வீக ஆற்றலை நினைவூட்டக்கூடிய ஒரு வழியாகவே திகழ்கிறது.
அதாவது நமக்கு தேவையான நேரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வழிகாட்டுதலாகவும், அவை நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய வலிமை பெற்றதாக இருக்கிறது.

தன்னம்பிக்கை புதிய வாய்ப்புகளை உருவாக்கும்:
நம்முடைய தன்னம்பிக்கை என்பது ஒரே இரவில் நம்முடைய சூழ்நிலைகளை மாற்றியமைத்து விடாது. ஆனால், அந்த சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் விதங்களை நெற்றிகமாக தன்னம்பிக்கை மாற்றி அமைக்க முடியும். அதாவது தன்னம்பிக்கை கொண்ட ஒருவர் பேசும் விதம், செயல்படும் விதம் மற்றும் முடிவுகளை எடுக்கக்கூடிய விதம் என எல்லா விஷயங்களிலும் தெளிவு காணப்படும்.
மேலும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் பொழுது முன்பு செய்ய முடியாது என்று தோன்றிய சவால்கள் கூட நம்மால் முயற்சி செய்து படிப்படியாக அதனை அடைந்து விடலாம் என்கின்ற சக்தியை கொடுக்கிறது. அதனால்தான், ஒரு மனிதனுடைய கனவுகளுக்கும் சாதனைகளுக்கும் இடையே தன்னம்பிக்கை ஒரு பாலமாக கருதப்படுகிறது.
தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவர்களிடம் எவ்வளவு பெரிய திறமைகள் இருந்தாலும் சில நேரங்களில் அவை வெளிப்படாமல் மறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
மன வலிமையை அதிகரிக்க ஓர் எளிய ஆன்மீகப் பயிற்சி:
அப்படியாக, பல பக்தர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் "ஆதித்ய ஹிருதயம் ஸ்தோத்திரத்தை" அவர்களுடைய அன்றாட வழிபாடுகளில் ஒரு பகுதிகளாகவே அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து சூரிய பகவான் முன்பு நீர் சமர்ப்பித்து ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்கின்ற பொழுது அவர்களுக்கு ஒரு நேர்மறையான எண்ணங்களுடன் அந்த நாளை துவங்குவதற்கான மன உறுதி கிடைப்பதற்கு உதவுகிறது.
இதோடு சேர்ந்து நாம் பெரியவர்களை மதிப்பது பெற்றோர்கள் ஆசிரியர்கள் சொல்லும் வழிகாட்டுதலுக்கு மதிப்பு கொடுத்து நடப்பது போன்ற விஷயங்களும் நம்முடைய மன வலிமையை அதிகரிக்க கூடிய ஒரு முக்கியமான பண்புகளில் அடங்குகிறது. அதோடு நாம், கடைபிடிக்கக்கூடிய சிறிய பழக்கங்கள் கூட காலப்போக்கில் ஒரு மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க காத்திருக்கிறது.
அதைதான், தன்னம்பிக்கையும் ஒரே நாளில் சூழ்நிலையை மாற்றி விடுவதில்லை, அதனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் பொழுது வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள கூடிய மிகப்பெரிய ஆற்றலும் மன வலிமையும் கிடைக்கிறது.
குறிப்பு:
இந்தக் கட்டுரை ஆன்மீக நம்பிக்கை மற்றும் பாரம்பரிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதித்ய ஹிருதயப் பாராயணத்தின் பலன்கள் தனிநபருக்கு வேறுபடலாம். இது மருத்துவ அல்லது நிபுணர் ஆலோசனைக்கு மாற்றாகாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |