2026: கர்மா ரீசெட் ஆகப்போகும் காலம்.. ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள் யார்

By Sakthi Raj Nov 18, 2026 04:40 AM GMT
Report

திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ராகு கேது பெயர்ச்சி டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது. அதனை அடுத்து இந்த ராகு கேது பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது என்று சிம்மம் ரங்கநாதன் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கும்பத்தில் இருக்கக்கூடிய ராகு மகர ராசிக்கும், சிம்மத்தில் இருக்கக்கூடிய கேது கடக ராசிக்கும் மாற இருக்கிறார்கள். இது தமிழக மற்றும் உலகளாவிய பல மாற்றங்களை ஏற்படுத்த கூடும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த பெயர்ச்சி"ஒரு கர்மா ரீசெட்" என்று குறிப்பிடப்படுகிறது.

சனி, சூரியனால் ராஜயோகம்... அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் யார்?

சனி, சூரியனால் ராஜயோகம்... அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் யார்?

அதாவது சென்னை கேரளா போன்ற கடலோர பகுதிகளில் இயற்கை சீற்றங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதேபோல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ டிக்ஸ் துறையின் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு முறையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

2026: கர்மா ரீசெட் ஆகப்போகும் காலம்.. ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள் யார் | 2026 Raghu Ketu December 05 Astrology Prediction

மக்கள் இயந்திரங்களை அதிக அளவு நம்புவதால் மன அழுத்தமும் அவர்களுக்கு அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதைப்போல், மத்திய அரசுகளில் மாற்றங்கள், அமைச்சரவை மாற்றம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, விவசாயம் தொடர்பான சவால்களும் சந்திக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், இந்த ராகு கேது பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர்கள் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்கிறார்.

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

குறிப்பாக, ஒருவர் வெறும் சடங்குகளை செய்வதை விட ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்தல் முதியவர்களுக்கு ஒரு சரியான ஊக்கமும் மதிப்பும் கொடுப்பது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என்பது மிகச் சிறந்த பரிகாரமாக எல்லோருக்கும் அமையும் என்றும் பல்வேறு ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் தொடர்பாக நம்முடைய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள்.

ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US