வளர்பிறை சஷ்டி முருகன் வழிபாடு

By Yashini Oct 08, 2024 09:15 AM GMT
Report

புரட்டாசி மாதம் நவராத்திரி நடந்து கொண்டிருக்க கூடிய இந்த சமயத்தில், வளர்பிறை சஷ்டி திதியானது செவ்வாய்க்கிழமை இன்று வந்திருக்கிறது.

பொருளாதாரத்தில் முன்னேற, செல்வ வளம் உயர, கடன் சுமையெல்லாம் குறைய, பண கஷ்டம், மன கஷ்டம் எல்லாம் சரியாக வேண்டும் என்றால் இன்றைய தினம் முருகர் வழிபாடு செய்வது அவசியம்.

வளர்பிறை சஷ்டி முருகன் வழிபாடு

இன்று வீட்டில் படிக்க வேண்டிய பாடல் கந்த சஷ்டி கவசம். கந்த சஷ்டி கவசத்தை பார்த்து மனதார படித்தால், துன்பங்கள் எல்லாம் தீர்ந்து, வாழ்க்கையில் நல்லது மட்டும்தான் நடக்கும்.

வளர்பிறை சஷ்டி முருகன் வழிபாடு | Today Valarpirai Sashti Worship  

அடுத்தபடியாக நெய் சேர்த்த ஒரு சாதத்தை, பிரசாதமாக முருகனுக்கு வைத்து அந்த பிரசாதத்தை ஒரே ஒரு ஏழைக்கு தானம் செய்தாலும் உங்களுக்கு கோடி புண்ணியம்.  

மேலும் லட்சுமி கடாட்சம் கொண்ட ஒரு பொருள் நெய் என்பதால் இதை பயன்படுத்தி செய்வதால் நல்லது நடக்கும்.

அடுத்து வீட்டில் வேல் வழிபாடு செய்வதாக இருந்தால் வேலுக்கு இன்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இன்று முருகர் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு முருகருக்கு அரளி பூ வாங்கி கொடுத்து 6 முறை வலம் வந்து வழிபாடு செய்தால் முருகன் அருள் கிடைக்கும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 



+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US