இன்றைய ராசி பலன்(28-10-2025)

Report

  மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு காலை முதல் அடுத்து அடுத்து வேலை பளு வர வாய்ப்புகள் உள்ளது. முகம் தெரியாத நபரின் அறிமுகத்தால் சில நன்மைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்:

சிலருக்கு காலை முதல் உடல் சோர்வு உண்டாகலாம். எதையும் நிதானமாக செய்வதால் மட்டுமே நன்மை உண்டாகும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள வாய்ப்புகள் உள்ளது. சொந்த ஊர்களில் சிலர் சில பிரச்சனையை சந்திப்பார்கள். தந்தை உடன் கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

கடகம்:

இன்று தொழில் ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுத்து முன்னேறி செல்வீர்கள். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மதியம் மேல மருத்துவரை சந்திக்கும் நிலை உண்டாகலாம்.

கடவுளுக்கு ஆரத்தி எடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

கடவுளுக்கு ஆரத்தி எடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

சிம்மம்:

முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும் என்றாலும், போராடி வெற்றி அடைவீர்கள். உறவுகளில் சில தடைகள் உண்டாகலாம். பிடித்தவர்களிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

கன்னி:

இன்று எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். உடன் பிரிந்தவர்களிடம் பகைமை கொள்ளாதீர்கள். கோபத்தை தவிர்ப்பதால் மட்டுமே இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.

துலாம்:

மனதில் உள்ள பயம் விலகும். வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். சிலருக்கு எதிர்மறையான சிந்தனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:

உங்கள் தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வேலை ரீதியாக உங்கள் பழைய அனுபவங்கள் கொண்டு முன்னேறி செல்வீர்கள். நற்பெயர் வாங்கும் நாள்.

தனுசு:

குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். பிள்ளைகள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மன கவலைகள் விலகும் நாள்.

மகரம்:

செல்வாக்கு உயரும் நாள். உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். சில முக்கியமான விஷயங்களை எந்த ஒரு பயமும் இன்றி எடுப்பீர்கள். நன்மையான நாள்.

கும்பம்:

குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரலாம். தைரியமாக சமாளிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வருமானம் தடை விலகும். நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்:

இன்று சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்ளும் நாள். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். பிள்ளைகள் நலனில் நீங்கள் அக்கறை செலுத்துவீர்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US