நாளைய ராசி பலன்(04-10-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் பேச்சுக்களால் ஆதாயம் பெறுவீர்கள். கடன் சுமை குறையும். மதியம் மேல் நண்பர்களுடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும்.

ரிஷபம்:

பழைய வாழ்க்கை அனுபவம் வழியாக முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். உடன் வேலை செய்பவர்களிடம் சற்று கவனமாகி இருக்க வேண்டும்.

மிதுனம்:

உறவினர்கள் வழியே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். புதிய தொடக்கங்கள் உங்களுக்கு நற்பலன் அளிக்கும்.

கடகம்:

ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் சில சங்கடம் உண்டாகலாம். மனதில் தாழ்வு மனப்பான்மையை குறைத்து கொள்ளுங்கள். முக்கியமான நபர்களை சந்திக்கும் நாள்.

சிம்மம்:

நீண்ட நாளாக வாழ்க்கையில் உள்ள பிரச்சனை உங்களை விட்டு விலகி செல்லும். சொத்துக்கள் வாங்குவதில் சில சங்கடங்கள் வரலாம். வேலையில் உங்களுக்கு எதிராக சிலர் செயல் பட வாய்ப்புகள் உள்ளது.

கன்னி:

இன்று முடிந்த வரை கொடுக்கல் வாங்கலில் உள்ள பிரச்சனைகள் விலகி செல்லும். எதிலும் சற்று நிதானமாக இருப்பது அவசியம் ஆகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதல்கள் விலகும்.

துலாம்:

சிலருக்கு உயர் கல்வி பற்றிய ஆலோசனை செய்வீர்கள்.ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு பெறுவீர்கள். நன்மையான நாள்.

வாழ்க்கையில் சனி தோஷம் இருப்பதற்கான 6 அறிகுறிகள்

வாழ்க்கையில் சனி தோஷம் இருப்பதற்கான 6 அறிகுறிகள்

 

விருச்சிகம்:

பள்ளி நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். உங்களின் சேமிப்புகள் குறைய அதிகம் வாய்ப்புகள் உள்ளது. தொழில் ரீதியாக உங்களுக்கு சில விஷயங்கள் சாதகமாக அமையும்.

தனுசு:

நீண்ட நாட்களாக சந்தித்து வந்த சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவைப்பெறும். சகோதரர் வழியை உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்பு பெறுவீர்கள்.

மகரம்:

நண்பர்களிடையே ஒரு சிலர் இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். பழைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முடிவுகளை செய்வீர்கள். வியாபாரம் செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.

கும்பம்:

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மறைமுகமான விமர்சனங்களை சந்திப்பீர்கள்.

மீனம்:

மனதில் இனம்புறியாத சிந்தனையும் சோர்வும் உண்டாகும். பொறுப்புகள் இன்று உங்களுக்கு அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US