நாளைய ராசி பலன்(11-10-2025)
மேஷம்:
நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த வேலை ஒன்றை முடிப்பீர்கள். உங்களுக்கு எதிராக பேசியவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும்.
ரிஷபம்:
உடலில் மனதில் சோர்வு உண்டாகும். இடம் மாற்றம் பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். உங்களுடைய கனிவான பேச்சுக்களால் பிறரை மனம் கவர்ந்து விடுவீர்கள்.
மிதுனம்:
இன்று ஒரு சிலர் உங்களைப் பற்றி மறைமுகமான விமர்சனங்கள் செய்யலாம். நெருக்கமானவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிற மொழி பேசும் நபர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
இன்று உங்கள் மனதில் இருந்த கவலைகள் விலகும். தொலைதூரப் பயணம் நன்மை கொடுக்கும். சிலருக்கு சமுதாய பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்:
இன்றும் மற்றவர்களின் தேவைகளை புரிந்து நடந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும்.
கன்னி:
மனதளவில் உற்சாகம் பெறக்கூடிய அற்புத நாள். தந்தை வழியே உங்களுக்கு ஆதரவுகள் கிடைக்கும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். தொலைதூர பயணம் நன்மை வழங்கும்.
துலாம்:
இன்று எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் ஒரு சில சோர்வுகள் உண்டாக்கலாம். பொறுமை காக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கும். நீண்டகால பிரச்சனையை சரி செய்வீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
தனுசு:
அரசு பணியில் ஒரு சிலருக்கு தாமதம் உண்டாகலாம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சிலர் தொந்தரவுகளை கொடுக்கலாம்.
மகரம்:
வியாபார பணிகளில் இன்று நீங்கள் பொறுமை காக்க வேண்டிய நாள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நீண்ட நாள் வழிபாடு மனநிறைவு கொடுக்கும். நன்மையான நாள்.
கும்பம்;
கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் விலகும். இன்று உங்களுடைய வாக்குறுதிகளை பிறருக்கு கொடுப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். தவறையும் சில பொருட்களை பிறரிடம் கொடுக்காதீர்கள்.
மீனம்:
எதிலும் விவேகத்தோடு செயல்படுவது அவசியமாகும். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் பெரியோர்களின் ஆசிர்வாதமும் அனுசரிப்பும் பெறக்கூடிய அற்புதமான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







