வீடுகளில் மறந்தும் இந்த தெய்வங்களுடைய புகைப்படத்தை வைக்காதீர்கள்
நம் வீடுகளில் கட்டாயம் பூஜை அறை இருக்கும். அந்த பூஜை அறையில் நமக்கு பிடித்தமான தெய்வங்களுடைய சிலைகளையும் படங்களையும் வைத்து நாம் வழிபாடு செய்வோம். அப்படியாக அதில் ஒரு சில தெய்வங்களுடைய புகைப்படங்களையும் சிலைகளையும் நாம் வைத்து வழிபாடு செய்ய கூடாது என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் உக்கிரமான தெய்வங்களுடைய புகைப்படம் மற்றும் சிலை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. பொதுவாக உக்கிரமான தெய்வங்களுடைய படங்களை நம் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும்போது நமக்கு ஒரு சில பயத்தை உண்டு செய்வதாக சொல்கிறார்கள்.
ஆதலால் உக்கிரமான தெய்வங்களுடைய படங்களை நாம் வீடுகளில் வைப்பதை தவிர்ப்பது நன்மை அளிக்கும். அதே போல் சிவபெருமானின் தாண்டவ உருவமான நடராஜா பெருமானின் சிலைகளும் புகைப்படங்களும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்கிறார்கள்.
அதாவது நடராஜர் பெருமானை வைத்து வழிபாடு செய்யும் பொழுது அவருக்கு உரிய சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் மேற்கொள்வது அவசியம் ஆகிறது. அதேபோல் நவகிரகங்களுடைய படங்களையும் நம்முடைய வீடுகளில் வைக்க கூடாது.
நவக்கிரகங்களுடைய படங்களை வீடுகளில் வைப்பதால் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கலாம் என்று நம்பப்படுகிறது. அதேபோல் மகாபாரதம் ராமாயணம் போன்ற புராணங்களில் வரக்கூடிய போர் காட்சிகளை நாம் வீடுகளில் வைக்கும் போது நம் வீடுகளில் போர் குணம் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. ஆக இவ்வாறான சிலைகளை நம் வீடுகளில் வைப்பதை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







