நாளைய ராசி பலன்(17-09-2025)
மேஷம்:
ஒரு சிலருக்கு வேலையில் இல்லை பணி சுமை அதிகரிக்கலாம். மனைவி இடையே தேவையில்லாத வாக்குவாதத்தை செய்வதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு மதியம் மேல் மருத்துவ செலவுகள் சந்திக்க நேரலாம்.
ரிஷபம்:
கட்டாயமாக இன்று உங்கள் உடல் நிலையில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டிய நாள். முடிந்தால் கோவில் வழிபாடுகளை செய்யுங்கள். குடும்பத்தில் மனம் திறந்து பேசுவதால் சில பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்:
இன்று ஒரு சிலருக்கு காலையில் அதிர்ச்சியான தகவல்கள் வந்து சேரும் நாள். குடும்பத்துடன் முக்கியமான நிகழ்வுகளில் பங்கு கொள்வீர்கள். வேலை தொடர்பான சில சிக்கல்கள் வரலாம்.
கடகம்:
பொருளாதார சிக்கலை சரி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவது அவசியமாகும். சிலருக்கு தலைவலியால் உடல் பிரச்சினை சந்திக்கலாம்.
சிம்மம்:
உங்கள் வியாபாரத்தை பற்றிய முழு தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு சில அவப்பெயர் உண்டாகும் நாள்.
கன்னி:
உடன் பிறந்தவர்களால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். தேவையில்லாத விஷயங்களை உங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதால் சில அவமானங்களை சந்திக்க நேரலாம்.
துலாம்:
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய நெருங்கிய நண்பர்களை சந்திப்பீர்கள். மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடம் விலகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.
தனுசு:
சொந்தங்கள் வழியே உங்களுக்கு சில நன்மைகள் நடக்கும். காலையில் இருந்து மனம் பதட்டமாக காணப்படும். பிள்ளைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
மகரம்:
என்று வாழ்க்கையை பற்றி புரிதல் உண்டாகும். தொழில் ரீதியாக ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் சமுதாய பணிகளில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.
கும்பம்:
தந்தை வழி உறவுகளால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். சிலர் இன்று கோவில் வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உருவாகும். நன்மையான நாள்.
மீனம்:
இன்று முக்கியமான நபரின் அறிமுகத்தை பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் உங்களுக்கு துணையாக நிற்பார்கள். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரக்கூடிய நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







