ஜாதகத்தில் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?
நாம் எல்லோருக்குமே வெளிநாடு செல்ல வேண்டும் அல்லது வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைகளும் கனவுகளும் இருக்கும். அப்படியாக யாருக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் ஜாதகத்தில் இருக்கும். அதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
நம்முடைய ஜாதகத்தில் பயணம் மற்றும் இடம் மாற்றத்தை குறிக்கக்கூடிய கிரகமாக நீர் கிரகமான சந்திரன் இருக்கிறார். அதோடு வேறு மொழி பேசும் நபர் அல்லது வேறு மதம் பேசும் நபரை குறிக்கக்கூடிய கிரகங்களாக ராகு கேது இருக்கிறது. இவர்கள்தான் ஒருவர் வெளிநாட்டு சென்று வேலை பார்க்கமுடியுமா என்பதை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.
மேலும், ஒருவருடைய ஜாதகத்தில் 9, 12 ஆகிய இடங்களில் உள்ள அதிபதிகள் ஏதேனும் கிரகங்களோடு இணைந்து இருந்தாலோ அல்லது பரிவர்த்தனை யோகம் அடைந்திருந்தாலோ அந்த நபர் வெளிநாடு செல்வார்.
ஒருவர் வெளிநாடு அல்லது வெளி இடங்களில் சென்று வாழக்கூடிய அமைப்பை சந்திரனுடன் குரு அல்லது சனி இணைந்து இருக்க வேண்டும். இந்த அமைப்புகளோடு ராகு கேது இணைவு பெற்றிருந்தாலும் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகம் அல்லது படிக்கும் யோகம் இருக்கும்.
மேலும் ஒருவர் ஜாதகத்தில் 9 அல்லது 12-ஆம் இடத்திற்கான அதிபதிகள் நீர் ராசிகளான கடகம் விருச்சிகம் மீனம் ஆகிய இடங்களில் நின்றாலும் அந்த ஜாதகர் வெளிநாடு சென்று வேலை பார்ப்பார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







