நாளைய ராசி பலன்(23-09-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றங்கள் உண்டாகலாம். ஒரு சிலருக்கு மதியம் மேல் உடல் உபாதைகள் உண்டாகும். மனதில் தேவை இல்லாத விஷயத்தை போட்டு குழப்பி கொள்ளாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ஒரு சிலருக்கு நட்பு வட்டாரங்கள் விரிவடையும். உங்கள் தேவைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொண்டு நடப்பார்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
தொழில் ரீதியாக அவர்கள் நிறைய சங்கடங்களை சந்திக்கலாம். கலை துறையில் இருப்பவர்களுக்கு மிக பெரிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் கிடைக்கும். தாய் உடலில் கவனம் தேவை.
கடகம்:
சொந்தங்கள் மத்தியில் உங்களின் பெயர் உயரும் நாள். தொழிலில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
சிம்மம்:
காலை முதல் வங்கி தொடர்பான சில பிரச்சினைகளை சந்திக்ககூடும். அக்கம் பக்கத்தினரிடம் நீங்கள் கவனமாக பேசுவது அவசியம். சிலருக்கு நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
கன்னி:
ஒரு சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத தகவல்கள் வந்து சேரலாம். தொலைதூர பயணத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை ரகசியத்தை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
துலாம்:
இன்று தற்பெருமைகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு ஆடம்பர பொருட்கள் மீது அதிக ஆர்வம் உண்டாகும். உங்களுடைய அலுவலகத்தில் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்:
இன்று ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுகள் இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
தனுசு:
இன்று ஒரு சிலருக்கு சொந்த ஊரில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். ஒரு வேலையில் கூடுதல் பொறுப்புகள் தேடி வரலாம். கலை துறையினருக்கு நன்மையான நாள்.
மகரம்:
உடன் இருப்பவர்களின் எண்ணங்களை அறிவு செயல்படுவது நல்லது நண்பர்களிடம் சற்று கவனமாக பழகுங்கள். பொறுமையுடன் செயல்படுவதால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும்
கும்பம்:
அரசு தொடர்பான விஷயங்களில் நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். அமைதிக்காக இறைவழிபாடு மேற்கொள்ளுங்கள்.
மீனம்:
உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். அரசு பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை தேடி வரும். தேவையில்லாத அலைச்சல் உண்டாகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







