இன்றைய ராசி பலன்(29-08-2025)
மேஷம்:
ன்று உங்களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உண்டு. முடிந்தவரை கவனமாக சில முடிவுகள் எடுக்கவும்.
ரிஷபம்:
இன்று நண்பர்களுடைய வெற்றியை கொண்டாடும் நாள். அலுவலகத்தில் உங்களுக்காக சிலர் வாதாடுவார்கள். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வதால் சில கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம்.
மிதுனம்:
கடந்த கால தவறுகளை சரி செய்ய முயற்சிப்பீர்கள். உங்களுடைய குடும்பங்களில் ஏற்பட்ட பண பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள். இன்று ஒரு சிலரை மன்னித்து ஏற்பதால் பெரிய சண்டைகளிலிருந்து தப்பிக்கலாம்.
கடகம்:
உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகலாம். மாமியாரிடம் சில வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்று முடிந்தவரை தொழில் இடங்களில் உங்களுடைய வேலையை நீங்களே செய்து முடித்து விடுங்கள். பிறரை நம்பி கடன் கொடுப்பதை இன்று முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கவனம் தேவை.
கன்னி:
இன்று உங்களுடைய தவறுகளை எண்ணி மனம் வருந்துவீர்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். சகோதர உறவுகளின் சிக்கல்கள் உண்டாகும்.
துலாம்:
இன்று எதிரிகளை வீழ்த்தும் நாள். உங்களை தவறாக புரிந்தவர்கள் உங்களிடம் மீண்டும் வந்து பேசுவார்கள். இன்று உங்களுடைய திறமையை அறிந்து பாராட்டுகளை தருவீர்கள். நம்பிக்கை அதிகரிக்க கூடிய நாள்.
விருச்சிகம்:
சொந்த ஊர்களில் இருந்து விலகி இருப்பதே உங்களுக்கு நன்மை தரும். தேவையில்லாமல் உங்கள் குடும்பம் விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பேச்சுக்களின் கவனம் தேவை.
தனுசு:
இன்று நீங்கள் விருப்ப ஓய்வு எடுக்கும் நாள். குடும்பங்களுடன் நேரத்தை செலவு செய்வதற்கு முயற்சிப்பீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலைப் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்:
இன்று வெளிநபர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் கருத்துக்களை நீங்கள் கவனமாக எடுத்துரைக்க வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளது.
கும்பம்:
வேலையில் நீங்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். கவன சிதறலால் சில முக்கிய பிரச்சினையை சந்திக்கலாம். உறவினர்களிடம் முடிந்தவரை மிக கவனமாக பேசுவதால் குடும்ப பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
மீனம்:
இன்று உண்மையை உணர்வீர்கள். மனப் பதட்டத்தை குறைத்து செயல்படுவதால் மட்டுமே காரியங்களில் வெற்றி கிடைக்கும். குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு காரியத்தை தொடங்குங்கள். முன்னோர்கள் ஆசிர்வாதம் உண்டு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







