நாளைய ராசிபலன் (08-10-2025)

Report

மேஷம்:

ஒரு சிலர் இன்று தேவை இல்லாத விமர்சனத்திற்கு ஆளாகக்கூடும். கடன் சார்ந்த விஷயங்களில் ஒரு சில சிக்கல் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் ஆர்வம் குறையும்.

ரிஷபம்:

இன்று வண்டி வாகனங்கள் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதத்தை செய்யாதீர்கள். மறைமுகமான எதிரிகளால் உங்களுக்கு கஷ்டங்கள் உருவாகலாம்.

மிதுனம்:

உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்கள் அறிந்து செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த சில ஏற்பாடுகளை செய்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு தொந்தரவுகளை கொடுக்கலாம்.

கடகம்:

சமூக பணிகளில் சிலர் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். வியாபாரத்தில் இடம் மாற்றம் உண்டாகும். நன்மையான நாள்

சிம்மம்:

உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வேலையில் மந்தமான நிலை விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி:

இன்று வீண் விவாதங்களை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். கடன் விஷயங்களில் கவனம் தேவை. அரசு வழி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். நிம்மதியை தேடி செல்லும் நாள்.

துலாம்:

சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். முயற்சிகள் தாமதமானாலும் வெற்றி அடையும் நாள்.

தவறியும் இந்த 3 பொருட்களை தானம் செய்யாதீர்கள்- பொருளாதார இழப்பு உண்டாகுமாம்

தவறியும் இந்த 3 பொருட்களை தானம் செய்யாதீர்கள்- பொருளாதார இழப்பு உண்டாகுமாம்

விருச்சிகம்:

தொலை தூர பயணம் தவிர்த்து விடுங்கள். பழைய பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் இருந்து நற்செய்தி வந்து சேரும்.

தனுசு:

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எதிர்பார்த்த தகவல் வந்து வரும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

மகரம்:

வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை நல்ல முடிவை பெரும். தேவைக்கேற்ற பணம் வரும். முயற்சி வெற்றியாகும். நன்மையான நாள்.

கும்பம்:

திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை நல்ல ஆரோக்கியத்தை பெரும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து வெற்றி பெறுவீர்.

மீனம்:

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். மனதில் தேவை இல்லாத சிந்தனை தோன்றி மறையும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்மையான நாள்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US