இன்றைய ராசி பலன் (19-10-2025)

Report

மேஷம்:

தேவை இல்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சற்று குழப்பம் வரலாம். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்:

மனதில் தேவை இல்லாத குழப்பமும் கோபமும் உண்டாகும். வெளியூர் பயணம் செல்வதை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

காலை முதல் மனம் பதட்டமாக காணப்படும். குடும்பத்தினரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்:

மனம் காலை முதல் சற்று பதட்டத்துடன் காணப்படும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். தந்தை உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்:

காலை முதல் வியாபாரத்தில் குழப்பமும் பதட்டமும் உண்டாகும். தாய் உடல் நிலையால் மருத்துவ செலவு உண்டாகலாம். மனைவி கணவன் இடையே சண்டை தவிர்ப்பது நல்லது.

கன்னி:

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பொன்னான செய்தி வந்து சேரும். வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சில சங்கடத்தை கொடுக்கும். பெரியவர்களின் ஆறுதல் கிடைக்கும்.

துலாம்:

பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். சிலரின் உண்மை முகம் தெரிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவீர்கள், காலை முதல் மனம் சற்று சோர்வுடன் காணப்படும்.

விருச்சிகம்:

முன்னேற்றமான நாள். கடந்தகால அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர். மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்.  

தனுசு:

பிள்ளைகள் உடல் நிலையில் அக்கறை செலுத்துவீர்கள். மனம் காலை முதல் நிதானமாக இருக்கும். கணவன் உங்களுக்கு துணையாக இருப்பார். மதியம் மேல் எதிர்பாராத நன்மைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

மகரம்:

எதிர்பாராத நபரால் சிலருக்கு ஆதாயம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வீடுகளில் செல்ல பிராணிகளிடம் சற்று கவனமாக இருங்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

கும்பம்:

இன்று நண்பர்களுடன் வெளியே சென்று பொழுது போக்கை செலுத்துவீர்கள். தேவை இல்லாமல் உங்கள் கோபத்தை வெளிக்காட்டாதீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மீனம்:

தந்தை வழி உறவால் ஆதாயம் கிடைக்கும். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை நடக்கும். நன்மையான நாள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US