இன்றைய ராசி பலன் (05-09-2025)
மேஷம்:
இன்று வீடுகளில் பல இக்கட்டான சூழ்நிலை உருவாகும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். உடன் பிறந்த சகோதிரிகளால் சில சங்கடம் சந்திப்பீர்கள்.
ரிஷபம்:
இன்று ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருந்து நற்செய்தி வந்து சேரும். மதியம் எதிர்பாராத மருத்துவ செலவுகளும் வரலாம். விவசாயம் செய்பவர்களுக்கு சில சங்கடமான நிலை உருவாகலாம்.
மிதுனம்:
இன்று ஒரு சிலருக்கு வேலையில் சில சிக்கலைகள் வரலாம். சொந்த பந்தங்கள் உங்களை விட்டு விலகி செல்ல வாய்ப்புகள் உண்டு. கவனம் தேவை. மருத்துவ தொழில் செய்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் நாள்.
கடகம்:
சொந்த வாழ்க்கையில் சந்தித்த சில பிரச்சனைகள் விலகி செல்லும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் சில ஆதாயம் உண்டாகும். முன்னோர்கள் வழிபாடு உங்களுக்கு நன்மை தரும்.
சிம்மம்:
இன்று உங்கள் ஆளுமை திறன் வெளிப்படும். வியாபாரத்தில் லாபமும் பெருமையும் கிடைக்கும். தாய் வழி உறவால் உங்களுக்கு நன்மை உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கன்னி:
இன்று உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். உங்களுக்கு சில சொந்தங்கள் உதவி செய்வார்கள். தாய் மாமன் வழி உறவால் உங்களுக்கு சில சங்கடங்கள் வரும். சிலருக்கு வருமானத்தில் சில தடைகள் உண்டாகும்.
துலாம்:
இன்று உங்கள் வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். செய்யும் வேலையில் முதலில் தடைகள் வந்தாலும் அதை சரி செய்து கொள்வார்கள். குலதெய்வம் வழிபாடு உங்களுக்கு நன்மை தரும்.
விருச்சிகம்:
எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். மனக்குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும்.
தனுசு:
தாய் வழி உறவால் உங்களுக்கு சில நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் முழு திறமையும் வெளிப்படும். வம்பு வழக்குகளில் சிக்காமல் இருப்பது நல்லது.
மகரம்:
நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். திட்டமிட்டபடி வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வியாபார நெருக்கடி விலகும். சிறு வியாபாரி, தொழிலாளர்கள் சங்கடம் நீங்கும்.
கும்பம்:
உங்கள் வீடுகளில் சந்தோஷமான நிலை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும்.
மீனம்:
இன்று வீண் பெருமை பேசுவதை தவிர்ப்பது உங்களுக்கு நன்மையை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







