இன்றைய ராசி பலன்(08-09-2025)

By Sakthi Raj Sep 07, 2025 12:05 PM GMT
Report

 மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் தேவை இல்லாத பிரச்சனை உண்டாகும். வெளி உலகில் செல்வாக்கு உயரும். சகோதரி வழி உறவால் தன்னம்பிக்கை உண்டாகும். நன்மையான நாள்.

ரிஷபம்:

தொலை தூர பயணம் உங்களுக்கு சில சங்கடமான நிலை உண்டாகும். வம்பு வழக்குகளில் சிக்காமல் இருப்பது நல்லது. வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும்.

மிதுனம்:

சகோதரி வழி உறவால் சில உண்மைகளை தெரிந்து கொள்வீர்கள். சிலர் வீடுகளில் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இன்று சில சிக்கல் உண்டாகலாம்.

கடகம்:

இன்று மன நிலையில் சில பதட்டம் உண்டாகும். உங்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். மதியும் மேல உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

சிம்மம்:

இன்று வியாபாரத்தில் சிலருக்கு எதிர்பாராத நஷ்டம் உண்டாகும். சிலருக்கு வீடுகளில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரன் வழி உறவால் நன்மை உண்டாகும்.

கன்னி:

இன்று மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்வது அவசியம். வேலையில் சந்தித்த சங்கடங்கள் விலகி செல்லும்.

துலாம்:

மனதில் பயமும் பதட்டமும் உண்டாகும். உறவினர்களிடம் சில மன வருத்தம் உண்டாகலாம். தந்தை உங்களுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள். பண கஷ்டம் விலகி செல்லும்.

விருச்சிகம்:

வண்டி, வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாயின் தாக்கத்தால் கோபம் அதிகரிக்கும். உங்களின் வேலைகள் தடைப்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மற்றவர்கள் மீது கோபப்படுவீர்கள்.

மகரம்:

திறமை அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பை விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது. நன்மையான நாள்.

கும்பம்:

குரு பகவான் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். வேலையில் நிம்மதி உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்

மீனம்:

இன்று சிலருக்கு வீடுகளில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மகன் வழியே சில சங்கடங்கள் சந்திக்க கூடும். மதியம் மேல் வழக்கு விஷயங்கள் உஙகளுக்கு சாதகமாக அமையும். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US