இன்றைய ராசி பலன்(24-04-2025)
மேஷம்:
உங்களின் மறைமுக எதிரியை கண்டுகொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். எதையும் தீர யோசித்து செய்வதால் வெற்றி அடைவீர்கள்.
ரிஷபம்:
சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உடல் ரீதியாக சில சங்கடங்களை சந்திப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் உங்களை வந்து சேரும். நண்பர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும்.
மிதுனம்:
மனதில் இனம் புரியாத குழப்பமும் கவலையும் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணி சுமை குறையும். உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்கள் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
கடகம்:
இன்று பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். மனம் ஒரு நிலை கொள்ளாமல் அலைபாய வாய்ப்புகள் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்கள் மனதை காயப்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் கவனம் அவசியம்.
சிம்மம்:
நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர். நினைப்பது நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்களுடைய வழக்கு சாதகமாக அமையும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் சிலர் எதிராக திரும்ப வாய்ப்புள்ளது.
துலாம்:
மனதில் உள்ள கவலைகள் விலகும். உங்களை பற்றி பெற்றோர்களுக்கு நல்ல புரிதல் உண்டாகும். எதையும் தீவிரமாக ஆலோசித்து செயல்பட்டால் நன்மை பெறுவீர்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
புதிய முதலீடு இன்று வேண்டாம்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும்.
தனுசு:
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் எல்லாம் விலகும். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்து மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு உண்டாகும். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.
மகரம்:
குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம்வரும். வெளியூர் பயணம் லாபமாகும். தொழிலில் இருந்த தடை விலகும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும்.
கும்பம்:
உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மனத்தெளிவு உண்டாகும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம்.
மீனம்:
நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். பலரின் உண்மை முகத்தை பற்றி தெரிந்து கொள்வீர்கள். சிலருக்கு மதியம் மேல் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்காமல் போகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |