நாளைய ராசி பலன்(28-08-2025)
மேஷம்:
இன்று உங்கள் மனதில் எதிர்காலம் பற்றிய கவலையும் பதட்டமும் உண்டாகும். சிலர் இடம் மாற்றம் செய்வது பற்றிய ஆலோசனை செய்வார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெற்று முக்கியமான வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்:
வழக்கமான விஷயங்கள் செய்வதில் சில தடையும் தாமதமும் உருவாகலாம். நண்பர்களைப் பற்றிய நல்ல புரிதல் உண்டாகும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.
மிதுனம்:
வாழ்க்கையில் செய்த சில முக்கியமான தவறுகளை எண்ணி வருந்துவீர்கள். நண்பர்களே அழைத்து பேசுவீர்கள். உங்களைப் பற்றி சிலர் புரிந்து கொள்வதற்கு சங்கடமான நிலை உருவாகலாம்.
கடகம்:
உடல் ஆரோக்கியத்தில் கட்டாயமாக அக்கறை செலுத்த வேண்டிய நாள். பிள்ளைகள் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்வீர்கள். இன்று மனதை அமைதி நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்:
இன்றைய எதையும் நிதானமாக செய்வதினால் மட்டுமே நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். உங்கள் தாய் சொல்வதை கேட்டாலும் நீங்களும் ஆலோசித்து ஒரு விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும்.
கன்னி:
இன்று நீங்கள் எதிர்பார்த்தது போல் அமையாவிட்டாலும் மாலை மேல் மனதில் அமைந்து உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகி சம நிலையில் நிற்பீர்கள். எதிலும் சற்று கவனம் தேவை.
துலாம்:
இன்று நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கப் போகிறது. உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள சில முக்கிய முயற்சிகள் எடுப்பீர்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
உணவு பழக்க வழக்கங்களில் கட்டாயம் கட்டுப்பாடு தேவை. உங்கள் தந்தை ஆரோக்கியத்தில் சில சங்கடங்கள் உருவாகலாம். மனதில் எதிர்மறை எண்ணத்தை தவிர்ப்பதற்காக ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள்.
தனுசு:
இன்று பிறர் சொல்லும் விமர்சனங்களை நீங்கள் காதில் எடுத்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்.
மகரம்:
இன்று சில உறவுகளை மன்னித்து ஏற்றுக் கொள்வதால் சில சங்கடங்களை தவிர்க்கலாம். எதற்கும் முன் நின்று போராடுவதை காட்டிலும் நிதானமாக செயல்படுவதால் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்:
வெளிநாடு செல்ல வேண்டும் என்ற காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி வந்து சேரும். நீங்கள் கேட்ட இடத்திலிருந்து உதவியும் பணமும் உங்கள் கைகளுக்கு வரும். வெற்றியை பெறப்போகும் நாள்.
மீனம்:
காலத்தின் கட்டாயமாக சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரும். பழைய நட்புகளால் சில உதவிகளும் ஆதாயமும் கிடைக்கும். வங்கி கணக்கில் வாங்கிய கடனை அடைக்கும் நிலை உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







