நாளைய ராசி பலன்(13-07-2025)
மேஷம்:
ஒரு சில உண்மைகளை பற்றி புரிந்துக்கொள்வீர்கள். புதிய வீடு நிலம் வாங்கும் யோசனை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நன்மையான நாள்.
ரிஷபம்:
இன்று உடல் சோர்வாக காணப்படும். இறைபணியில் சிலர் ஈடுபடுவார்கள். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். பெற்றோர்கள் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
மிதுனம்:
மனதில் சங்கடங்கள் தோன்றி மறையும். தவறான முடிவுகள் எடுத்து மனதை குழப்பிக்கொள்வீர்கள். முடிந்த வரை மனதை நிதானமாக வைப்பது நன்மை அளிக்கும்.
கடகம்:
உங்களின் கஷ்ட காலங்கள் உங்களை விட்டு விலகி செல்லும். பிள்ளைகள் நலனில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள். பணத்தட்டுப்பாடு விலகும். முன்னேற்றம் காணும் நாள்.
சிம்மம்:
இன்று தொழிலில் சந்தித்த பிரச்சனைகள் விலகி செல்லும். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வீர்கள். மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி:
பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
இன்று சில உண்மைகளை புரிந்து கொள்வீர்கள். வாங்கிய கடனை அடைக்கும் யோகம் உண்டாகும். தொழிலில் நல்ல மாற்றம் முன்னேற்றம் இருக்கும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்:
அரசுவழியில் நெருக்கடி, சங்கடம், பிரச்னை தோன்ற வாய்ப்புண்டு. வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது நல்லது. வழக்கை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
மகரம்:
இன்று உங்கள் மேல் சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் முடிந்த வரை வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றி மறையும்.
கும்பம்:
மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். உங்கள் முகத்தில் இருந்த கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்:
இன்று மனதில் ஏற்பட்ட கவலைகள் விலகி செல்லும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். விலகி சென்ற சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |