இன்றைய ராசி பலன்(21-07-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் உறவினரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் வழக்கு விஷயமாக சில எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:

உங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். முன்னோர்கள் வழிபாடு உங்களுக்கு சிறந்த பலன் அளிக்கும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு மனதில் பல குழப்பங்கள் தோன்றி மறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். நன்மையான நாள்.

கடகம்:

ஒரு சிலருக்கு மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகி செல்லும். வண்டி வாகனத்தில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். இறைவழிபாடு மிக சிறந்த பலன் கொடுக்கும். இனிமையான நாள்.

சிம்மம்:

இன்று தொழில் ரீதியாக உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல் விலகி செல்லும். மூன்றாம் நபரிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீண் வழக்குகளில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

கன்னி:

மாணவர்களுக்கு படிப்பு ரீதியாக சில சங்கடங்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. உற்றார் உறவினர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆடி அமாவாசை 2025: இந்த வருடம் எப்பொழுது? திதி கொடுக்க உகந்த நேரம் எது?

ஆடி அமாவாசை 2025: இந்த வருடம் எப்பொழுது? திதி கொடுக்க உகந்த நேரம் எது?

துலாம்:

இன்று ஒரு சிலருக்கு தேவை இல்லாத மன உளைச்சல் அலைச்சல் உண்டாகும். சட்டம் ரீதியாக சந்தித்த சிக்கல்கள் விலகி செல்லும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிகம்:

கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வருவாய் அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் தோன்றும். 

தனுசு:

இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வீடுகளில் உண்டான பிரச்சனைகள் விலகி செல்லும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்:

உங்கள் முயற்சியில் கவனம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது இன்று அவசியம். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது. உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச்செல்வர். 

கும்பம்:

தாய் வழி உறவுகளால் உண்டான பிரச்சனைகள் நல்ல தீர்வைப் பெரும். அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்ப்புகளை சந்திப்பீர்கள்.

மீனம்:

இன்று தேவை இல்லாத மன உளைச்சல் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US